யெச்சூரியுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு – ஜனாதிபதி தேர்தலில் தீயாய் வேலை செய்யும் பாஜக...

First Published Jun 16, 2017, 6:10 PM IST
Highlights
marksist communist party general secretary seethaaram yechury meet rajnath sing


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை அமைச்சர் ராஜ்நாத்சிங் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிக்க கருத்து கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

இதையடுத்து அடுத்த ஜனாதிபதி யார் என்பதற்கான தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்ய பாஜக தரப்பிலும் காங்கிரஸ் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளன.

பாஜக தரப்பில் அமைக்கப்பட்ட ராஜ்நாத்சிங், வெங்கையாநாயுடு, அருண்ஜெட்லி ஆகிய 3 பேர் கொண்ட குழு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 23ந் தேதி அதன் வேட்பாளரை அறிவிக்கும் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை அமைச்சர் ராஜ்நாத்சிங் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிக்க கருத்து கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!