சூர்யா வன்னியர்களிடம் மன்னிப்பு கேள்.. நீ எங்கேயும் நடமாட முடியாது.. காடுவெட்டி குரு மருமகன் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Nov 9, 2021, 4:32 PM IST
Highlights

அதேபோல காவல் உதவி ஆய்வாளரின் வீட்டில் வன்னியர் சங்கம் காலண்டர் இருப்பதுபோல காட்டப்பட்டுள்ளது, குருவென்று யாருக்கு வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம், ஆனால் இந்த படத்தில் அந்த பெயர் திட்டமிட்டு அந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. 3 கோடி வன்னிய மக்களுக்கும் குரு என்றால் அது காட்டுவெட்டி குரு அவர்களையே குறிக்கும், ஏன் எங்கள் மீது  இவ்வளவு வன்மத்துடன் சூர்யா படம் எடுத்துள்ளார். 

3 கோடி வன்னிய மக்களிடத்திலும் நடிகர் சூர்யா பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவரது திரைப்படம் எந்த தியேட்டரில் ஓடாது,  தியேட்டர்களை தீவைத்து கொளுத்துவோம் என  காடுவெட்டி குருவின் மருமகன் ஆவேசம் தெரிவித்துள்ளார்.  இதே போக்கை சூர்யா கடைபிடித்தால் அவர் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் நடமாடவே முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். காதல், போலீஸ் என கமர்சியலாக நடித்து வந்த நடிகர் சூர்யா, முதல்முறையாக வழக்கறிஞர் கெட்டப்பில் அநீதி இழைக்கப்பட்ட பழங்குடியினர் சமூகத்திற்காக போராடும் கதாபத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள படம் ஜெய் பீம். முதல் முறையாக வழக்கறிஞர் கெட்டப்பில் அவர் நடித்துள்ளார். இது அவரின் 39வது திரைப்படம் ஆகும். இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், கர்ணன் பட கதாநாயகிகள் ரஜிஷ விஜயன், லிஜோமொள் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில் அமேசான் பிரைமில் இந்த படம் வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில்  காவல்துறையால் திருட்டு பழி சுமத்தப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்று காவல் நிலையத்திலேயே அடித்துக்கொலை செய்யப்பட்ட ராசா கண்ணு என்ற இருளரின் வழக்குதான் இந்த கதை. இதில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்த போது கையாண்ட வழக்குதான் ஜெய்பீம் திரைப்படத்தில் கதைக்களம். அதில் நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்த்தில்தான் சூர்யா நடித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக எல்லா காட்சிகளும், கதாபாத்திரங்களும் உயிரோடு இருக்கும் சூழ்நிலையில் இந்த படம் திரைக்கு வந்துள்ளது. காவல் நிலையத்தில் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட ராசா கண்ணுவின் மனைவி செங்கேணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை  லிஜோமொள் ஜோஸ் நடித்துள்ளார். விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட கணவர் மாயமான நிலையில் கணவனுக்கு நீதிகேட்டு வழக்கறிஞர் சந்துருவை அனுகிய செங்கேணி தனது கணவனுக்கு நேர்ந்த அநீதிக்கு நீதி பெற்றாரா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்.

இந்த படத்தில் இருளர் இன மக்களை அடித்து கொடுமை செய்யும் உதவி ஆய்வாளரின் பெயர் குரு என்பதாகும், அவரை திரைப்படத்தில் வன்னியராக சித்தரிப்பதாக ஒரு காட்சி இடம் பெற்றுள்ளதால், இப்படத்துக்கு எதிராக வன்னியர்கள் குரல் கொடுத்துள்ள வருகின்றனர். அதாவது திரைப்படத்தில் இருளர் இன மக்களை கொடுமை செய்யும்  காவல் ஆய்வாளராக நடித்துள்ளவரின் பின்னால் வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்றிருக்கும், ஆனால் உண்மை சம்பவத்தில் உதவி ஆய்வாளர் பெயர் அந்தோணியாகும், அவர் கிறிஸ்தவர் ஆவார். ஆனால் உண்மைக்கு மாறாக வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்த வேண்டும் என்றே அந்த காட்சி சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும்,  உண்மையை பிரதிபலிக்கும் வகையில்  படம் எடுத்து இருக்கிறோம் என்று கூறிவிட்டு உண்மையாக அந்தோணி என்ற பெயர் கொண்ட அந்த காவல் ஆய்வாளருக்கு ஏன் குரு மூர்த்தி என பெயர் வைத்தீர்கள், அப்படி என்றால் வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குருவை இழிவு படுத்தும் நோக்கில் இப்படி செய்யப்பட்டதா.? என கேட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் காடுவெட்டி குருவின் மருமகன் காடுவெட்டி மனோஜ் என்பவர், ஜெய்பீம் திரைப்படத்தில் அந்த குறிப்பிட்ட காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர், இருளர் சமுதாய மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்காக எடுக்கப்பட்ட படம் எடுக்கப்பட்டுள்ளது அதனை வரவேற்கிறோம், ஆனால் உண்மை கதை கதாபாத்திரங்களை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறோம் என கூறிவிட்டு, அந்த படத்தில் வருகின்ற சப் இன்ஸ்பெக்டரை வன்னியர் போல சித்தரிக்கப்பட்டுள்ளது எதற்காக, தொடர்ந்து வன்னியர்களை கொடூரமானவர்களாகவும், குற்றப்பின்னணி உள்ளவர்களாகவும் கட்டப்பட்டு வருகிறது, ஆனால் உண்மை சம்பவத்தில் அந்த உதவி ஆய்வாளர் பெயர் அந்தோணி, ஆனால் அவருக்கு குரு என திட்டமிட்டு பெயர் வைக்கப்பட்டுள்ளது, வழக்கறிஞராக வருபவருக்கு சந்துரு என பெயர் வைக்கப்பட்டுள்ளது, உயிரிழந்த ராசகண்ணுவின் பெயர் அப்படியே வைக்கப்பட்டுள்ளது, அப்படி இருக்க உதவி ஆய்வாளர் அந்தோணியின் பெயரை மட்டும் ஏன் குருமூர்த்தி என மாற்றி வைத்துள்ளீர்கள் என்பதே எனது கேள்வி.

அதேபோல காவல் உதவி ஆய்வாளரின் வீட்டில் வன்னியர் சங்கம் காலண்டர் இருப்பதுபோல காட்டப்பட்டுள்ளது, குருவென்று யாருக்கு வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம், ஆனால் இந்த படத்தில் அந்த பெயர் திட்டமிட்டு அந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. 3 கோடி வன்னிய மக்களுக்கும் குரு என்றால் அது காட்டுவெட்டி குரு அவர்களையே குறிக்கும், ஏன் எங்கள் மீது  இவ்வளவு வன்மத்துடன் சூர்யா படம் எடுத்துள்ளார். அந்த காவல் உதவி ஆய்வாளருக்கு ஏன் குரு என பெயர் வைத்ததற்கு  மாற்றாக, அவருக்கு தீரன் சின்னமலை என்ன பெயர் வைப்பாரா சூர்யா, அப்படி அவர் வைத்திருந்தால் அவரை வீடு புகுந்து அடித்து நாசம் செய்திருப்பார்கள், இதே போக்கில் சூர்யா சென்றால் அவர் தமிழகத்தில் எந்த இடத்திலும் நடமாட முடியாது. அவர் 3 கோடி வன்னிய மக்களிடத்திலும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் ஜெய் பீம்  திரையிடப்படும் எல்லாத் திரையரங்குகளையும் கொளுத்துவோம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

click me!