அவரை பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் தான் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுகிறார் என்றால், படித்த முட்டாள்கள் கூட அவருக்கு வாழ்த்து சொல்கிறார்கள். சீமான் என்பவர் மனசாட்சியற்றவர், மொத்தத்தில் அவர் ஒரு 420 என அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை முத்துராமலிங்க தேவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியைப்போல சித்தரித்து வெளியாகி உள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சீமானை உலகத் தலைவர்கள் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கும் இந்த புகைப்படங்கள் அவரை கொண்டாடும் நோக்கில் வெளியிடப்பட்டதா, அவரை கலாய்ப்பதற்காக இப்படி மார்பிங் செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விகள் ஒரு புறமிருக்க, அந்த புகைப்படங்கள் ரசிக்கும் வகையில் உள்ளதால் அது பலரையும் கவர்ந்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு சர்ச்சைகளுக்கு மையமாக இருப்பவர் சீமான். திரைப்பட இயக்குனர் கனவில் சென்னை வந்த அவர், பெரியார் திடலில் அரசியல் பயின்ற அவர், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மேடைகளில் அரசியல் பயணத்தை தொடங்கியவர் ஆவார். ஈழப் போருக்குப் பின்னர் தமிழ் தேசிய அரசியலை மையமாகக் கொண்டு நாம் தமிழர் கட்சியை முன்னெடுத்தார். பிறகு காலப்போக்கில் ஆர்.எஸ்.எஸ்ஸின் குரலாக ஒலிக்கிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இப்போது எழுந்துள்ளது. பெரியாரை பயின்று அரசியல் பேசிய அவர், பெரியாருக்கு சிலை எதற்கு என கேள்வி எழுப்பி அதிரவைத்தார்.
பாஜகவைச் சேர்ந்த கே.டி ராகவன் பாலியல் விவகாரத்தில் யாரும் செய்யாததையா கே.டி ராகவன் செய்துவிட்டார் என அவர் பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. திராவிடக் கட்சிகளை ஒழிப்பதுதான் என் லட்சியம் என பேசி வரும் அவர் குறிப்பாக திமுகவை மட்டும் குறிவைத்து டேமேஜ் செய்வதை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ராஜீவ் படுகொலை ஒரு துன்பியல் சம்பவம், அதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் விளக்கமளித்து விட்டபிறகு, ராஜீவ்வை ஸ்ரீபெரும்புதூரில் வைத்து தூக்கியது (புலிகள்தான்) நாங்கள் தான் என மார்தட்டிக் கொள்வது புலிகளின் ஆதரவாளர்கள் நிலை குலைய வைத்தது.
மேலும், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலைக்கே ஆபத்தான மாறியுள்ளது. சாந்தன் முருகன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலையாக கூடாது என்ற பாஜகவின் அதே நோக்கத்தில்தான் சீமான் இப்படி பேசுகிறாரா? என்ற சந்தேகத்தை அவரின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது. 100 நாள் வேலை திட்டம் புரணி பேசும் இடமாக மாறி விட்டது, விவசாயத்திற்கு வேட்டுவைக்கும் திட்டம் என அவர் பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இஸ்லாமும், கிறித்தவமும் வெளிநாட்டு மதங்கள் எனவே அனைவரும் சைவத்திற்கு திரும்ப வேண்டும் என அவர் சமீபத்தில் தெரிவித்த கருத்து சீமான் வெளிப்படையாகவே ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பேச தொடங்கிவிட்டார் என்ற விமர்சனத்தை அவர் மீது எழுந்துள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் தனக்குமான உறவு மிக நெருக்கமானது என்றும் அவரது சட்டைப்பையில் இருந்து பேனாவை எடுத்து எழுதி விட்டு பிறகு அவரது சட்டைப் பையில் வைக்கும் அளவிற்கு நெருக்கமானது என அவர் பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்க வெறும் எட்டு நிமிடங்கள் மட்டுமே சீமானுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர் புலிகளுடன் சேர்ந்து ஏகே 47 ரக துப்பாக்கியில் பயிற்சி எடுத்ததாகவும், அப்போது ஆமை கறி விருந்து சாப்பிட்டதாகவும், தமிழ்நாட்டில் புலிகளின் குரலாக நீங்கள்தான் ஒலிக்க வேண்டுமென பிரபாகரனே தன்னிடம் சொன்னதாகவும், சீமான் மேடைதோறும் பேசிவருவது பலருக்கும் அவரது பேச்சின் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தனது பேச்சால் அடுத்தடுத்து சர்ச்சைகளை கிளப்பி வரும் சீமான் சமீபத்தில் கூறிய கருத்து பலரையும் அதிர்ச்சியத்தில் மூழ்கடித்துவிட்டது என்றே சொல்லலாம். இலங்கையிலிருந்து செல்லும் தமிழர்களை ஆஸ்திரேலிய அகதிகளாக ஏற்கிறது, ஐரோப்பா சொந்த தாயக மக்களை போல குடியுரிமை வழங்குகிறது, நான் கடிதம் கொடுத்தால் பிரான்ஸ் அந்த மக்களுக்கு குடியுரிமை கொடுக்குது.. நான் கடிதம் கொடுத்தால் டென்மார்க், சுவிஸ் குடியுரிமை கொடுக்குது.
மக்களை கைது செய்து சிறையில் வைக்கிறார்கள், பிறகு விசா வேண்டும் குடியுரிமை வேண்டும் என்று சொன்னால் அந்த விண்ணப்பத்தில் என்னுடன் அரசியல் பணி செய்கிறார்கள் என நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால், உடனை அந்த நாடுகளெல்லாம் அவர்களுக்கு குடியுரிமை கொடுத்துவிடுகிறது. இதுபோல 400 பேருக்கு குடியுரிமை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் 35 ஆண்டுகளாக இங்கே ஈழத்தமிழருக்கு குடியுரிமை தருவதில்லை என சீமான் பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. தமிழகத்தின் சாதாரண ஒரு அரசியல் கட்சியால் இதெல்லாம் எப்படி செய்ய முடியும், பேசுறத கொஞ்சம் நம்பும்படியா பேசுங்க என பலறும் அவரை கலாய்த்து வருகின்றனர். மொத்தத்தில் சீமான் தன்னை ஒரு நாட்டின் அதிபர் ரேஞ்சுக்கு மக்கள் மத்தியில் பில்டப் கொடுத்து கொள்கிறார். அவரது தம்பிகள் அவர் பேசுவதையெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என பலரும் பல வகையில் சீமானையும் நாம் தமிழரையும் விமர்சித்து வருகின்றனர்.
"இந்த மண் ஒரு நாள் என் கையில் சிக்குச்சுனா இதை தலைகீழாக மாற்றி விடுவேன்", "வலுவான நெய்தல் படை அமைத்து இலங்கை மீது போர் தொடுப்பேன்" அவரின் அல்டிமேட் டயலாக்குகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நான் கையெழுத்து போட்டு கடிதம் கொடுத்தால் உலக நாடுகள் குடியிருமை கொடுக்கிறது என்ற அவரின் பேச்சு லேட்டஸ்ட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. இந்நிலையில் அவரின் பேச்சுகள் அவர் சொல்லும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், அவரின் பேச்சுக்கள் அனைத்தும் கட்டுக் கதைகள் என்று பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் சீமானின் பேச்சை கண்டித்த வைகோ, சீமானின் பேச்சால் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகளும் அவர் மீது கொந்தளிப்பில் இருக்கின்றனர், அவரை நம்ப வேண்டாம் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அதேபோல் சீமான் தனது வாழ்க்கையை சீரழித்து ஏமாற்றிவிட்டதாக கூறிவரும் நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தொண்டர்களை பார்த்து நீங்க திருந்தவே மாட்டீங்களா என்றும், ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படி சீரழிப்பது என்றும், பிறகு அதற்கான ஆதாரங்களை எப்படி மறைப்பது, அதில் மாஸ்டர் பிளான் எப்படி போடுவது என்பது குறித்தெல்லாம் உங்க அண்ணன் சீமானிடம் கற்றுக் கொள்ளுங்கள் என ஆதங்கத்துடன் வீடியோ வெளியிட்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அவரை பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் தான் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுகிறார் என்றால், படித்த முட்டாள்கள் கூட அவருக்கு வாழ்த்து சொல்கிறார்கள். சீமான் என்பவர் மனசாட்சியற்றவர், மொத்தத்தில் அவர் ஒரு 420 என அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். அதே பாணியில் அவரை பலரும் விமர்சித்தும் தாக்கியும் எழுதி வருகின்றனர். இன்னும் சிலர், தன்னை ஒரு அதிபர் ரேஞ்சுக்கு சீமான் பில்டப் கொடுத்துக் கொள்கிறார்கள் என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சீமானை முத்துராமலிங்க தேவர், மெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரதமர் மோடி, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உள்ளிட்ட தலைவர்களைபோல சித்தரித்து வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் பல வகைகளில் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.