அரசியலிலும் ரஜினிதான் சூப்பர் ஸ்டார்! ஏசியா நெட் நியூஸ்-ன் மெகா சர்வே முடிவுகள்

First Published Jul 26, 2018, 7:05 PM IST
Highlights
Survey Report Rajini is real superstar of tamil nadu political


தமிழ்நாட்டில் கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியமைத்து வந்துள்ளன. தமிழ்நாட்டு அரசியலில்  உடல்நலம் குன்றி ஓய்வில் இருக்கும் கருணாநிதி மற்றும் மறைந்த ஜெயலலிதா என களத்தில் ஆளுமைகள்  இல்லாத நிலையில்,  ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் அரசியல் பிரவேசம் எடுத்துள்ளனர். 

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழக அரசியல் சூழல் மாற தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார், உலகநாயகன் ஆகிய இருவரில் மக்களிடத்தில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்..

AZ ரிசர்ச் பார்ட்னர்ஸ் என்ற அமைப்பு கடந்த ஜூன் 24 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் 11,691 பேரிடம் கருத்து கேட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

சென்னை 

இந்த ஆய்வு முடிவின் அடிப்படையில் சென்னையில் ரஜினிகாந்திற்கு 19% மக்களின் ஆதரவும் கமலுக்கு 5% ஆதரவு மட்டுமே இருக்கிறது. திமுகவின் கோட்டையான சென்னையில் ரஜினிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. 

மத்திய மற்றும் மேற்கு மண்டலம் 

மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களை பொறுத்தவரை ரஜினிக்கு தலா 12 சதவிகிதம் ஆதரவு உள்ளது. ஆனால்  கமலுக்கு மத்திய  மண்டலங்களில்  2 சதவிகிதம் மற்றும் மேற்கு  மண்டலத்தில் 3 சதவிகிதம் ஆதரவு மட்டுமே உள்ளது. 

சென்னையில் ரஜினிக்கு இருக்கும் ஆதரவு திமுகவின் வாக்கு வங்கியை பாதிக்கும். ஆனால் ரஜினி மற்றும் கமலால் மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஏற்கனவே தி.மு.க மற்றும் அ.தி.மு.க  வாங்கிய வாக்கு வங்கிகளில் பெரிய பாதிப்பு இருக்காது என்பதை தெளிவாக சொல்கிறது ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

தெற்கு மற்றும் வட மாவட்டங்கள்:

தென் மாவட்டங்களில் ரஜினிகாந்திற்கு 9% ஆதரவும் கமல்ஹாசனுக்கு 5% ஆதரவும் உள்ளது. வட மாவட்டங்களை பொறுத்தமட்டில் ரஜினிகாந்திற்கு 7% மற்றும் கமல்ஹாசனுக்கு 4% ஆதரவு உள்ளது. 

ஸ்டார் வேல்யூ:

எம்ஜிஆருக்கு பிறகு  அதே மவுசு என்பது கமலைவிட  ரஜினிதான் மாஸ். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் மீது அதிருப்தியில் இருக்கும் அக்கட்சிகளின் தொண்டர்கள், ரஜினி கட்சி தொடங்கியதும் அவரது கட்சியில் இணைய ஆர்வம் காட்டுவதாக  தகவல் வந்தது . 

 சினிமாவில்  பெரும்பாலும் மக்களின் குறைகளை தீர்ப்பவராகவே ரஜினியை   காட்டப்படுவதால். ரஜினியின் ரசிகர்கள்  ரீல் வாழ்க்கையும், ரியல் வாழ்க்கையும் பிரித்துப் பார்க்கமுடியவில்லை. தமிழகத்தில் இருக்கும் முக்கிய  பிரச்னைகளை ரஜினிதான் தீர்த்து வைப்பார் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.

ரஜினியைவிட அரசியல் களத்தில் கமலின் களப்பணிகள்தான் சூப்பராக  இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.  அதனால்  கமலைவிட  ரஜினிக்கே  மக்களிடத்தில் வலுவான ஆதரவு உள்ளதாக சர்வே முடிவு சொல்கிறது. 

ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் வாக்கு பகிர்வு:

தமிழ்நாட்டு வாக்காளர்களில் 40% பேர் ரஜினி ரசிகர்கள் மற்றும் 30 சதவிகிதம் பேர் கமலின் ரசிகர்கள் என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. மேலும் இதுவரை வாக்களிக்காத 25 சதவிகிதம் வாக்காளர்களில் 15 சதவிகிதம் பேர் ரஜினிக்கும் 10 சதவிகிதம் பேர் கமலுக்கு வாக்களிக்க தயாராக உள்ளதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன. 

மேலும், தமிழகத்தை பொறுத்த வரை ஒட்டுமொத்தமாக ரஜினிக்கு 11 சதவிகிதம் ஆதரவும்  கமலுக்கு 4 சதவிகிதம் ஆதரவும் கிடைத்துள்ளது. சினிமாவில் மட்டுமல்ல  அரசியல் களத்திலும்  உலகநாயகனை பின்னுக்குத் தள்ள வாய்ப்புள்ளதை  சர்வே முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

click me!