காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு இதுதான்..! இதிலும் உள்ளே புகுந்த ஹெச்.ராஜா...! 

First Published Mar 24, 2018, 3:49 PM IST
Highlights
Supreme Court verdict on Cauvery affair Incoming h. raja


உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை தீர்ப்பில் குறிப்பிடவில்லை என பாஜக தேசிய செயலாளர் ஹச்.ராஜா தெரிவித்துள்ளார். 

மேலும் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழர்களுடைய உரிமை நிச்சயம் பெற்றுத்தரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 

காவிரி நதிநீர் பிரச்சனையில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 6 வாரங்களுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இது வரை அதற்கான முயற்சிகளையோ அல்லது அறிவிப்பையோ மத்திய அரசு வெளியிடவில்லை.

இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும்  நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வரும் 30 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 

இதைதொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

மெத்தம் 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும் என்று நீர்வளத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 5 முழு நேர உறுப்பினர்களும், மாநிலங்களைச் சேர்ந்த 4 பகுதி நேர உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை தீர்ப்பில் குறிப்பிடவில்லை என பாஜக தேசிய செயலாளர் ஹச்.ராஜா தெரிவித்துள்ளார். 

மேலும் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழர்களுடைய உரிமை நிச்சயம் பெற்றுத்தரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 
 

click me!