வேளாண் சட்டம்.. நீங்கள் நிறுத்திவைக்க விரும்பாவிட்டால் நாங்கள் நிறுத்தி வைப்போம்.. லெப் ரைட் வாங்கிய கோர்ட்.!

By vinoth kumarFirst Published Jan 11, 2021, 1:20 PM IST
Highlights

 மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், நாம் அனைவருமே பொறுப்பு. யாரின் கைகளிலும் ரத்தக்கறை படிவதை நாங்கள் விரும்பவில்லை. 

விவசாய சட்டங்களை நிறுத்திவைக்க மத்திய அரசு முடிவு எடுக்காவிடில் நீதிமன்றம் நிறுத்தி வைக்கும்  என உச்சநீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 47வது நீடித்து வருகின்றது. இந்த சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் பல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசை தலைமை நீதிபதி பாப்டே கேள்விகளால் துளைத்து எடுத்தார். 

விவசாயிகள் போராட்டத்தை அரசு கையாளும் விதம் ஏமாற்றமளிக்கிறது. நிலைமை மோசமாக உள்ளது. என்ன மாதிரியான பேச்சுவார்த்தை நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. வேளாண் சட்டங்களை சில காலங்களுக்கு நிறுத்தி வைக்க முடியுமா? போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் தற்கொலை செய்துள்ளனர். முதியவர்கள், பெண்களும், போராட்ட களத்தில் உள்ளனர். 

என்ன நடக்கிறது. வேளாண் சட்டம் எந்த வகையில் சிறந்தது என்பது குறித்து ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. சட்டத்தை அமல்படுத்துவதை எங்களால் தடை செய்ய முடியும். வேளாண் சட்டங்களை அமல்படுத்தியே தீருவோம் என்று மத்திய அரசு நினைப்பது ஏன் என தெரியவில்லை. சட்டங்களை நிறுத்தி வைக்க அரசு தயாராக இருந்தால், விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு எந்தவிதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், நாம் அனைவருமே பொறுப்பு. யாரின் கைகளிலும் ரத்தக்கறை படிவதை நாங்கள் விரும்பவில்லை. சட்டத்தை நிறுத்திவைக்க மத்திய அரசு விரும்பாவிட்டால், நாங்கள், சட்டத்தை நிறுத்தி வைப்போம் என தலைமை நீதிபதி கூறியுள்ளார். 

click me!