இந்துக்களை கேவலமாக பேசும் ஸ்டாலினை மண்ணை கவ்வ செய்வோம்.. சசிகலா புஷ்பா ஆவேசம்..

By Ezhilarasan BabuFirst Published Jan 11, 2021, 1:16 PM IST
Highlights

முன்னாள் எம்.பி யும் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினருமான சசிக்கலா புஷ்பா பொங்கல் அடுப்பை பற்ற வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

கன்னியாகுமாரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயம் முன்பு பா.ஜ.க மகளிர் சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா நடைபெற்றது. 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். அதில் பாஜக செயற்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டார். பொங்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழர் திருநாள் பொங்கல் விழாவின் சிறப்பையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் விதத்தில் தமிழகம் முழுவதும் பா.ஜ.க மகளிரணி சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா நடைபெற்றுவருகிறது. 

அந்த வகையில், நேற்று கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க மகளிரணி சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா மண்டைக்காடு பகவதியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.  இந்த நம்ம ஊரு பொங்கல் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.பி யும் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினருமான சசிக்கலா புஷ்பா பொங்கல் அடுப்பை பற்ற வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

 

நிகழ்ச்சிக்கு முன்னதாக தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சியான வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய செயர்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறுகையில், தமிழர்களின் நாகரிகம் மற்றும் பண்பாட்டை கேவல படுத்தும் திமுகவிற்கு வருகின்ற தேர்தலில் பாடம் புகட்டும் விதமாக இந்த பொங்கல் அமைந்துள்ளது என்றும், இந்துக்களை கேவலமாக பேசும் ஸ்டாலினை நாங்கள் எதிர்க்கிறோம் என்றும், பாஜவின் வெற்றியை மகளிரின் ஆதரவோடு நடக்கும் இந்த பொங்கல் விழா நிரூபிக்கும் அச்சாரமாக அமைந்துள்ளது என்றும் கூறினார்
.
 

click me!