தமிழகத்தை விட்டு வெளியே செல்ல கூடாது… ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் வைத்த செக்!!

By Narendran SFirst Published Nov 25, 2022, 10:18 PM IST
Highlights

தமிழகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

தமிழகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்தாக எழுந்த புகாரில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வார இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நிபந்தனை என்னவென்ரால் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் காவல் நிலைய எல்லையை தாண்டி ராஜேந்திர பாலாஜி பயணிக்க கூடாது என்பது தான்.

இதையும் படிங்க: திமுக மாணவர் அணித்தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் நியமனம்... அறிவிப்பு வெளியிட்டது தலைமைக் கழகம்!!

இந்த நிலையில் இந்த நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி விசாரணைக்கு சென்றிருந்தது. அப்போது உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீனை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் காவல் நிலைய எல்லையினை தாண்டக் கூடாது என்கிற நிபந்தனையை தளர்த்தி தமிழகம் முழுவதும் பயணம் செய்யப்படும் கடவுச்சீட்டு புதுப்பிக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டது.  

இதையும் படிங்க: எம்எல்ஏவாக கூட தகுதியில்லாதவர் தினகரன்.. உங்க அட்வைஸ் எங்களுக்கு தேவையில்லை.. சீறும் சி.வி.சண்முகம்.!

பின்னர் இந்த விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தார். அதன்படி கடந்த 1ம் தேதி அன்று இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்யும்படி ஜாமின் நிபந்தனை தளர்த்த வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுக்குறித்த விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில், நடந்தது. அப்போது, தமிழ்நாட்டில் விட்டு வெளியே செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

click me!