திமுக மாணவரணி தலைவராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தியை நியமனம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
திமுக மாணவரணி தலைவராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தியை நியமனம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளியான அறிக்கையில், திமுக சட்ட திட்டம் விதி-18, 19 பிரிவுகளின்படி மாநில மாணவர் அணித் தலைவர் செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: எம்எல்ஏவாக கூட தகுதியில்லாதவர் தினகரன்.. உங்க அட்வைஸ் எங்களுக்கு தேவையில்லை.. சீறும் சி.வி.சண்முகம்.!
இதையடுத்து, மாணவர் அணித் தலைவராக இரா. ராஜீவ்காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து, மாணவர் அணி செயலாளராக சி.வி.எம்.பி.எழிலரசன், மாணவர் அணி இணை செயலாளர்களாக பூவை சி. ஜெரால்டு, எஸ். மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் தடை மசோதா..! விளக்கம் கேட்ட ஆளுநர்..? உடனடியாக பதில் அளித்த தமிழக அரசு
மாணவர் அணி துணைச் செயலாளர்களாக மன்னை த. சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா. அமுதரசன், பி.எம். ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி. கோகுல், பூர்ண சங்கீதா, ஜெ. வீரமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. மாணவர் அணித் தலைவர் - செயலாளர் - இணைச் செயலாளர்கள் - துணைச் செயலாளர்கள் நியமனம்.
- தலைமைக் கழகம் அறிவிப்பு pic.twitter.com/Xw0it1Ddkd