4 டிஎம்சி தண்ணீர் கொடுங்க... இல்லைன்னா... கர்நாடாகவை சுலுக்கெடுத்த சுப்ரீம் கோர்ட்...

Asianet News Tamil  
Published : May 03, 2018, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
4 டிஎம்சி தண்ணீர் கொடுங்க... இல்லைன்னா... கர்நாடாகவை சுலுக்கெடுத்த சுப்ரீம் கோர்ட்...

சுருக்கம்

Supreme court judugment about Cauvery melanmai variyam

உச்ச நீதிமன்றத்தில் காவிரி தொடர்பான வழக்கு இன்று காலை 10.45 மணிக்கு மூன்றாவது வழக்காக விசாரணைக்கு வந்தது

ஆறு வாரங்களுக்குள் மே 3ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில் கர்நாடகத் தேர்தலைக் காரணம் காட்டி மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டது மத்திய அரசு.

காவிரி வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் கேட்டு மத்திய அரசு இடைக்கால மனு ஒன்றை நேற்று (மே 2) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. வரும் 16ஆம் தேதி வரை அவகாசம் கோரிய இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரணை செய்யும்படியும் தலைமை நீதிபதி அமர்வின் முன்பு மத்திய அரசு முறையிட்டது. ஆனால், அவசர வழக்காக ஏற்று விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நாளை காவிரி தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (மே 3) மூன்றாவது வழக்காக இன்று காலை 10.45 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு அமைச்சரும் பிரதமரும் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளதால் ஒப்புதல் பெற முடியவில்லை காவிரி வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மேலும் இரண்டு வார கால அவகாசம் தேவையென வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் கோரிக்கையை வைத்தது.

இதற்கு உச்ச நீதிமன்றம்  தமிழகத்துக்கு  மே மாதத்துக்குள் 4டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் இல்லையெனில் கடும் விளைவுகளை கர்நாடாக சந்திக்க நேரிடும் என அதிரடியான தீர்ப்பை வழங்கி வழக்கை மே 8ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

ஆனால் இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் விளை நிலங்களுக்கு இது போதுமானது இல்லை யென விவசாயிகள் அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளன.

உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளை கர்நாடக அரசு செயல்படுத்ததாத நிலையில் இந்த தீர்ப்பை கர்நாடக அரசு எவ்வாறு கையாளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!