தோலுரிக்கப்பட்ட OPS அதிகார துஷ்பிரயோகம்! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி!சிவி.சண்முகம்

By vinoth kumarFirst Published Sep 13, 2022, 6:34 AM IST
Highlights

இந்த வழக்கு தொடர்பாக விசாரணையில் ஓர் அரசியல் கட்சியின் அலுவலகத்தை அரசு இப்படி முடக்கினால், அந்த அரசியல் கட்சியால் எப்படி இயங்க முடியும்? இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமான ஒரு செயல்  என்று கூறி ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகார துஷ்பிரயோகத்தை உச்சநீதிமன்றம் தோலுரித்துக் காட்டியுள்ளது. மேலும் இந்த தீர்ப்பு ஆளும் திமுகவிற்கு சம்மட்டி அடி என சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

அதிமுக அலுவல சாவி உரிமை தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணையில் ஓர் அரசியல் கட்சியின் அலுவலகத்தை அரசு இப்படி முடக்கினால், அந்த அரசியல் கட்சியால் எப்படி இயங்க முடியும்? இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமான ஒரு செயல்  என்று கூறி ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதையும் படிங்க;- விடியா திமுக அரசே.! சாட்டையை சுழற்றிய எடப்பாடி பழனிசாமி - அதிமுகவினருக்கு கட்டளை போட்ட இபிஎஸ்.!

இதனையடுத்து, டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேசிய இபிஎஸ் ஆதரவாளரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம்;- ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றபோது சென்னை அதிமுக அலுவலகத்துக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் வந்த குண்டர்கள் ரவுடிகள் ஆகியோர் ஆயுதங்களுடன் தொண்டர்களையும் பொதுமக்களையும் தாக்கினார்.

மேலும் அதிமுக அலுவலகத்தையும் அடித்து உடைத்து பொருட்களையும் சூறையாடியதுடன்  அலுவலகத்தையும் சீல் வைக்கும் நிலைக்கு உருவாக்கினர். திமுக அரசுடன் இணைந்து இத்தகைய செயலை செய்தனர். அலுவலகத்துக்கு சீல் வைத்தது தொடர்பாக எங்களுடைய எதிர்க்கட்சி தலைவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டது. அதன்படி அந்த அலுவலகம் எங்கள் பொறுப்பில் ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உத்தரவை எதிர்த்து கழகத்தைவிட்டு நீக்கப்பட்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தை அரசு இப்படி முடக்கினால், அந்த அரசியல் கட்சியால் எப்படி இயங்க முடியும்? இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமான ஒரு செயல் என்று உச்ச நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்துள்ளது. இதன்மூலம் பன்னீர்செல்வத்தின் அதிகார துஷ்பிரயோகத்தை உச்சநீதிமன்றம் தோலுரித்துக் காட்டியுள்ளது. மேலும் இந்த தீர்ப்பு ஆளும் திமுகவிற்கு சம்மட்டி அடி. அதுமட்டுமின்றி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவும் செல்லும் என கூறியிருக்கிறது. 

மேலும், இந்த விவகாரத்தில் தனிநீதிபதியின் உத்தரவு செல்லும் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், மாவட்ட வருவாய் அதிகாரி, தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டிருக்கிறார் எனக் கூறி உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது என்று சி.வி.சண்முகம் கூறினார்.

இதையும் படிங்க;-  அதிமுகவில் இணையும் அன்வர் ராஜா.. யார் அணியில் இணையப்போகிறார் தெரியுமா ? எடப்பாடியா? பன்னீரா?

click me!