இந்தியாவை அமைதியாகவே இருக்க விடமாட்டீங்களா ? இந்து, இஸ்லாமிய அமைப்புகளை வச்சு செஞ்ச உச்சநீதிமன்றம் !!

By Selvanayagam PFirst Published Apr 12, 2019, 7:25 PM IST
Highlights

அயோத்தியில் பூஜை நடத்த அனுமதி கோரிய மனுவை   தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இந்தியாவை நீங்கள் நிம்மதியாக இருக்க விட மாட்டீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பியது.

அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வரும் ராமஜென்மபூமி–பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக உச்சநீதிமன்றம் மூவர் குழுவை அமைத்துள்ளது.

இந்நிலையில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம், “நீங்கள் தேசத்தை ஒருபோதும் அமைதியாக இருக்க அனுமதிக்க மாட்டீர்கள். ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கும்,” என கூறியது.

இவ்விவகாரத்தில் மனுதாரருக்கு ஏற்கனவே அலகாபாத் உயர்நீதிமன்றம் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது. இதனை திரும்பப்பெற உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதேபோன்று அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் தொழுகை செய்ய அனுமதி கோரிய மனுவையும் அலகாபாத் நீதிமன்றம், ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது.
 

click me!