கட்சி பெருசா? ஒரு வாய் காஃபி பெருசா?: துரைமுருகனை துவைத்தெடுக்கும் கேள்வி

By Vishnu PriyaFirst Published Apr 12, 2019, 6:32 PM IST
Highlights

*    என்னுடைய பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்றே என் வெற்றி தேனியில் உறுதியாகிவிட்டது. தேனி மாவட்டத்திற்கான மிகப்பெரிய பிரச்னையே ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகனும்தான். விரைவில் அதை சரி பண்ணுவோம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். 
 

*    என்னுடைய பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்றே என் வெற்றி தேனியில் உறுதியாகிவிட்டது. தேனி மாவட்டத்திற்கான மிகப்பெரிய பிரச்னையே ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகனும்தான். விரைவில் அதை சரி பண்ணுவோம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். 
(பாரபட்சமில்லாம, சொந்தக் கட்சிக்காரனையே கிண்டலடிக்கிற பழக்கதோஷம் முத்திப் போயி இப்ப தன்னைத்தானே கிண்டலடிச்சுக்குற அளவுக்கு வந்துடுச்சு. பேரை அறிவிச்சதுமே வெற்றி உறுதி!ன்னு சொல்றது எந்தளவு பாதிப்பாகி இருக்குதுன்னு பாருங்க. உடம்பையும், மனசையும் கவனியுங்க இளங்கோ!)

*    இரட்டை இலையை தோற்கடிக்க இந்த உலகத்தில் யாரும் பிறக்கவில்லை. நாளை மட்டுமல்ல, நாற்பதும் நமதே: தம்பிதுரை. 
(ஒரு வேளை உங்களுக்கு சீட் கிடைக்காம, கை கழுவி விட்டிருந்தாங்கன்னா நீங்க என்ன சொல்லியிருப்பிங்க தெரியுமா? ‘ஐந்து ஆண்டு காலம் இந்த தேசத்துக்கு எதுவுமே செய்யாமல் சீரழித்த பி.ஜே.பி. அரசு, அம்மா கட்டிக்காத்த கழகத்தையும் தன் கைகளுக்குள் போட்டு சீரழிக்கிறது. நிற்கும் நாற்பது தொகுதிகளிலும் பி.ஜே.பி. மட்டுமல்ல இந்த கூட்டணியே தோற்கும்.’ இப்படித்தான பிரதர்?)

*    அ.தி.மு.க. கூட்டணி பிடிக்காவிட்டாலும் கூட வேறு வழியில்லாமல் பா.ம.க. நிர்வாகிகள் அந்த கட்சியில் உள்ளனர். ராமதாஸின் குடும்பமோ, இந்த ஆட்சியால் ஏதாவது காரியம் சாதிக்கலாம் எனும் நினைப்பில் அங்கே சேர்ந்துள்ளனர்: பொங்கலூர் மணிகண்டன். 
(சரிங்க மணி! கட்சியோட துணை தலைவரா இருந்த நீங்க, கூட்டணி முடிஞ்சு, பல கட்ட பிரசாரங்கள் நடந்து, இன்னும்  நாலு நாள்ள எல்லாமே ஊத்தி மூடப்போற நேரத்துல இதைச் சொல்லி வெளியேறி இருக்கீங்களே, எதைச் சாதிக்க இதை செஞ்சீங்க?ன்னு ஜி.கே.மணி கேக்குறாப்ல.)

*    வருமான வரி சோதனை நடைபெற்றபோது என் மகன் கதிர் ஆனந்தை டாய்லெட் செல்லவோ, காஃபி குடிக்கவோ கூட அனுமதிக்கவில்லை அதிகாரிகள். கடுமையாக அலைக்கழித்தனர்: துரைமுருகன். 
(வேலூர் ரெய்டால டோட்டலா 40 தொகுதியிலேயும் உங்க கட்சி நிலைமை மிக மோசமாக நாசமாகி கிடக்குது. கட்சிய பத்தி கவலையில்ல. ஆனா மகன் காஃபி குடிக்கலையேன்னு வருத்தம். கரைவேஷ்டி கூட கட்டாத ஆளுக்கு சீட் கொடுத்த ஸ்டாலின் தான் இதுக்கெல்லாம் அசிங்கப்படணும்)

*    தி.மு.க. ஒரு கட்சியே இல்லை. அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். அந்த கம்பெனியின் நிர்வாக இயக்குநர் ஸ்டாலின். எம்.ஜி.ஆர். எப்போது தி.மு.க.வில் இருந்து விலகினாரோ அப்போதே தி.மு.க. அழிந்துவிட்டது: டாக்டர். ராமதாஸ். 
(கட்சியே இல்லாத அந்த தி.மு.க. கூடதான் அத்தனை தடவை கூட்டு வெச்சீங்களா  டாக்டரே? வன்னியர்களுக்கு கருணாநிதி பெருசா செஞ்சு கொடுத்தப்பல்லாம் உங்களுக்கு எம்.ஜி.ஆர். நியாபகம் வரலை, ஆனா இப்ப வந்துச்சு பாருங்க! அதுதானுங்க எடப்பாடியோட மகிமை)

click me!