
" விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப அமித்ஷா அவர்களே வருக வருக" என்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர் சேகர் தெரிவித்துள்ளார். அமித்ஷா நாளை புதுச்சேரி வர உள்ள நிலையில் அவர் இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புதுச்சேரியில் பாஜக என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள நிலையில் முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வரவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு மற்றும் அம்மாநில பாஜகவும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படைத் தனி விமானத்தில் இன்று இரவே அமித்ஷா சென்னை வர உள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி மாநிலத்தில் நடக்க இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
அதாவது புதுச்சேரி மாநிலத்திற்கு நாளை 24ஆம் தேதி ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் அமித்ஷா. அதற்காக அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு வழியாக புதுச்சேரி வருவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அதில் மாற்றம் செய்யப்பட்டு அவர் எல்லை பாதுகாப்பு படை விமானத்தில் இன்று இரவு சென்னை வந்து தங்கிவிட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை ஆவடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்ல உள்ளார். அதற்காக இன்று மாலையே அமித்ஷா இந்திய எல்லை பாதுகாப்பு படை தனி விமானத்தில் புறப்பட்டு 7:30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகை தர உள்ளார். பின்னர் அங்கிருந்து 7:35 மணிக்கு கார் மூலம் புறப்பட்டு இரவு 8 மணிக்கு ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப் முகாம் அலுவலகத்திற்கு செல்கிறார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் அவர் இரவு தங்க உள்ளார்.
தொடர்ந்து நாளை 8:30 முப்பது மணிக்கு விருந்தினர் மாளிகையில் இருந்து 8:35க்கு ஆவடி விமான படை தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 8 45 மணிக்கு புதுச்சேரி மாநிலம் புறப்பட்டு செல்கிறார். கிட்டத்தட்ட 9:30 மணிக்கு அவர் புதுச்சேரி மாநிலம் சென்றடைகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டேன் அன்று மாலை 5:30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு 6:15 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பின்னர் பழைய விமான நிலையத்திலிருந்து அதே எல்லை பாதுகாப்பு படை தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார். அமித்ஷா நாளை பல்வேறு நலத்திட்ட களை துவக்கி வைக்கிறார். அவரின் வருகை பாண்டிச்சேரி பாஜகவினர்க்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது வருகை மாநில வளர்ச்சிக்கு அடிக்கலாக இருக்கும் என்றும், புதுச்சேரி பாஜகவினர் கூறி வருகின்றனர்.
அமைச்சர் இரவு சென்னையில் தங்க உள்ளது தமிழக பாஜகவின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரை வரவேற்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, அவரை வரவேற்று பாஜக தலைவர்கள் சமூகவலைதளத்தில் பல்வேறு வாசகங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர், தனது ட்விட்டர் பக்கத்தில் அமித்ஷாவை வரவேற்று கவிதை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் #welcomeAmitShah வாய்வீச்சு கழக அரசியல்.. வாள்வீச்சு காவி அரசியல்.. செயல் மறவனே திறன் நிறைந்தவனே #dravidianstock ஆட்டத்தை அடக்க அதிரடி வேண்டாம், உன் நடை அதிர்வே போதும். விடியாத அரசை வீட்டுக்கு அனுப்ப வா வா வா... அதிரடியே வா. அமித்ஷாவே வா என அவர் பதிவிட்டுள்ளார். இதை பாஜகவினர் பலரும் வரவேற்று பரப்பி வருகின்றனர்.