
அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து நீக்கபட்டுள்ள பன்னீர்செல்வம் தற்போது முதலமைச்சராக நீடித்து வருகிறார்.
அவருடைய கட்சிப் பதவியை சசிகலா பிடுங்கிவிட்டாலும் தொடர்ந்து அவருக்கான ஆதரவு கூடிவருகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன் பன்னீர்செல்வம் வீட்டிற்கே சென்று தனது நிபந்தனையில்லாத ஆதரவை தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாணிக்கம், ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முன்னாள் அமைச்சரும் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தொல்வியடைந்தவருமான பரிதி இளம்வழுதி பன்னீர்செல்வத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருவதால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.