
முதலமைச்சர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அதிமுக இரண்டாக உடைந்துள்ளது.
சசிகலா குடும்பமா? ஓ.பண்நீர்செல்வமா? யார் ஆட்சியை தக்க வைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் சசிகலா ஒருபக்கம் எம்.எல்.ஏக்கள் ஆதரவை திரட்டி வருகிறார். பன்னீர்செல்வமோ மறுபக்கம் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவால் வெற்றி பெற்று எம்.எல்.ஏ பதவி அடைந்துள்ளவர்கள் பன்னீர்செல்வத்திற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என சசிகலா எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இப்போதாவது மன்னார்குடியின் சதி திட்டத்தை புரிந்துகொண்டு தன்னைப்போல் தைரியமாக வெளியே வந்து போராடுங்கள் என சசிகலா புஷ்பா கேட்டுகொண்டுள்ளார்.