
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி சரவெடியால் ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளும் ஆடித்தான் போயுள்ளனர்.
செய்தி தொடர்பாளர்களாக இருக்கும் சி.ஆர்.சரஸ்வதி, ஆவடிக்குமார் உள்ளிட்டோர் சசிகலாவிற்கு ஆதரவாகவும் ஓ.பி.எஸ் க்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்துவிட்டார். பாஜகவுடன் கைகோர்த்து கொண்டு கூட்டுச்சதி செய்துவிட்டார். காரணம், ஆட்சியமைக்க உரிமை கோரிய பின்னரும் ஆளுநர் ஏன் தமிழகம் வரவில்லை.
இந்நிலையில், ஜெயலலிதாவின் ஆன்மா பன்னீர்செல்வத்தை மன்னிக்காது என பொங்கு பொங்கு என பொங்கியிருக்கிறார் அதிமுகவின் டிவி பிரபலம் ஆவடிக்குமார்.
இந்த நிலையில் பன்னீர்செல்வத்தை யாரோ பின்னால் இருந்து இயக்குவதாகவும் அதிமுகவை உடைக்க சதி நடப்பதாகவும் சமீப காலத்தில் பிரபலமடைந்த சி.ஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.