
ஜெயலலிதாவின் சமாதியில் திடீரென மவுன அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை நேரடியாக எதிர்த்து விட்டார்.
அதற்காக மீண்டும் அவர் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி கொண்டார். ஜெயலலிதா தன் மனதில் வந்து சொன்னதால்தான் சசிகலாவை எதிர்பதாக தெரிவித்துள்ளார்.
நிருபர்கள் ராஜினாவை வாபஸ் வாங்குவீர்களா என கேட்டபோது எம்.எல்.ஏக்கள் மற்றும் மக்கள் விரும்பினால் நிச்சயம் வாபஸ் பெறுவேன்.
மேலும் தன்னை மிகவும் கட்டாயப்படுத்தி அவமானபடுத்தி விட்டார்கள் என தன் மனக்குமுறலை கொட்டினார் ஓ.பி.எஸ்.
அம்மாவின் ஆணைப்படி முதல்வரான என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
அரசியலை விட்டு விலகுவேன் என முதலில் சொன்ன பன்னீர்செல்வம் தற்போது தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக முடிவு எடுத்ததால் சசிகலா பதவி ஏற்பதில் மிகவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்னும் சொல்லபோனால் சசிகலா முதல்வராவதே கடினம் என்கின்றனர் அரசியல் வல்லுனர்கள்.