கண்ணீருடன் தியானத்தை கலைத்த ஓபிஎஸ்…ஜெ நினைவிடத்தில் தன்னந்தனியாக தரையில் அமர்ந்து உருக்கம்…

 
Published : Feb 07, 2017, 09:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
கண்ணீருடன் தியானத்தை கலைத்த ஓபிஎஸ்…ஜெ நினைவிடத்தில் தன்னந்தனியாக தரையில் அமர்ந்து உருக்கம்…

சுருக்கம்

கண்ணீருடன் தியானத்தை கலைத்த ஓபிஎஸ்…ஜெ நினைவிடத்தில் தன்னந்தனியாக தரையில் அமர்ந்து உருக்கம்…

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்த அவர் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.முதலமைச்சர் பன்னீர் செல்வம் இதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதே நேரத்தில் சசிகலா இதுவரை பதவியேற்க முடியாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று இரவு திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த ஓபிஎஸ் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கு தரையில் அமர்ந்த ஓபிஎஸ் மௌனமாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.

எதற்காக இந்த மௌன விரதம்? இறுகிய முகத்துடன் ஏன் உள்ளார்? அரை மணி நேரத்துக்கு மேலாக அமர்ந்திருந்தார்... ஜெயலலிதாவிடம் ஏதோ வேண்டிக்கொள்வது போல் அமர்ந்திருந்தார்..

அவரது இந்த திடீர் செயல்பாடு பரபரப்பை ஏற்படுத்தியது.. ஜெயலலிதாவிடம் ஏதோ ஆலோனை கேட்பது போல் அவரது செயல்பாடு அமைந்திருந்தது.

அதிர்ச்சி, கவலை, கோபம், ஏமாற்றம் என அனைத்து உணர்ச்சிகளும் அவரது முகத்தில் கொப்பளித்தது.. அரை மணி நேரத்துக்குப் பிறகு மௌனத்தைக் கலைத்த அவர் கண்ணீர் சிந்தினார். பின்னர் அவர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு