"மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்" - பிரதமருக்கு சசிகலா கடிதம்

 
Published : Feb 07, 2017, 04:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
"மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்" - பிரதமருக்கு சசிகலா கடிதம்

சுருக்கம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை தேவை என அதிமுக சட்டமன்ற குழுத்தலைவர் சசிகலா பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு சசிகலா எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள 35 தமிழக மீனவர்களையும், 120 மீன்பிடி படகுகளையும்  விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை என குறிபிட்டுள்ளார்.

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு கோளாறு காரணமாக நடுகடலில் நின்றதாகவும், அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 10 தமிழக மீனவர்களுடன் சேர்த்து படகுகளையும் சிறைபிடித்து சென்றதாக தெளிவுபடுத்தியுள்ளார்.

சர்வதேச கடல் எல்லை விதிமுறைகளுக்கு முரணாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!