சசிகலாவை நேரடியாக எதிர்த்தார் ஓ.பி.எஸ்.!!! அசிங்கபடுத்தி விட்டதாக அதிரடி பேட்டி....

 
Published : Feb 07, 2017, 10:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
சசிகலாவை நேரடியாக எதிர்த்தார் ஓ.பி.எஸ்.!!! அசிங்கபடுத்தி விட்டதாக அதிரடி பேட்டி....

சுருக்கம்

40  நிமிட நேரம் யாரிடமும் பேசாமல், கண்களை திறக்காமல், வாய்மூடி மவுனத்தோடு தான் தலைவியின் சமாதியில் மண்டியிட்டார் முதலமைச்சரான பன்னீர்செல்வம்.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள இந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஒரு நாட்டின் முதல்வருக்கு உரிய எந்த பாதுகாப்பும் இல்லாமல் சாமநியனை போல தன்னந்தனியாக ஜெயலலிதாவின் சமாதியின்முன் அமர்ந்தார்.  மீடியாக்களுக்கே முதலில் தெரியாமல் இருந்தது. பின்னர் விஷயம் கசிய கசிய மீடியாக்கள் குவிந்துவிட்டன.

பின்னர் தியானத்தை நிறைவு செய்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம் அதிரடி சரவெடிகளை கொளுத்தி போட்டார்.

எனது மனசாட்சி துக்கபட்டதாலும் மனசு உறுத்தியதாலும் இங்கு தியானம் செய்ய  வந்தேன். அம்மாவின் ஆன்மா என்னை உந்தியது. எனவே உங்கள் முன் நிற்கிறேன்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது மோசமான நிலையை எட்டியபோது என்னிடம் வந்து அம்மா உடல்நிலை மோசமாக உள்ளது. கட்சி ஆட்சி காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளது என கேட்டனர்.

மாற்று ஏற்பாடு என்ன என கேள்வி எழுப்பியபோது அவர்கள் சொன்னதை கேட்டு அம்மாவின் நிலையை கண்டு அழுது புலம்பினேன்.

உடனடியாக கழக பொதுசெயலாளர், முதல்வர்  பொறுப்பிற்கு மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டும் என நான் கேட்டேன்

அப்போது பொதுசெயலாளராக அவைத்தலைவர் மதுசூதனனையும் முதல்வராக என்னையும் இருக்க வேண்டும் என கேட்டுகொண்டார்கள்.

முதலில் நான் ஏற்கவில்லை. பின்னர் இந்த இக்கட்டான சூல்நிலையில் அம்மா அவர்களுக்காக தான் முதல்வராக பதவி ஏற்றேன்

முதல்வராக பதவி ஏற்று கொண்ட மூன்று தினங்களில் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மன்னார்குடி திவாகரன் தன்னுடைய அக்கா பொதுச்செயலாளராக வேண்டும் என என்னிடம் கேட்டுகொண்டார்.

நான் மிகவும் யோசித்தேன். மூத்த நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தேன்.

பின்னர் வர்தா புயல், குடிநீர் பிரச்சனை, ஜல்லிக்கட்டு என தமிழகத்திற்கு செய்தவற்றை பட்டியலிட்டார். ஆனால் என்னை மேலும் மேலும் அவமானபடுத்துகிறார்கள்.

பன்னீர்செல்வம் சசிகலா தன்னை பகிரங்கமாக அசிங்கபடுத்தி விட்டார் என கூறியுள்ளதால் அதிமுக இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!