
ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து சசிகலா தரப்பிலும் எதிர் ஆட்டத்தை தொடங்கி உள்ளனர்.
அதிமுகவில் சுமார் 10 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர் பதவியை அதிரடியாக அவரிடம் இருந்து பிடுங்கியுள்ளார் சசிகலா.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதிலாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை அதிமுகவின் புதிய பொருளாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓ.பி.எஸ்ஸை நீக்கினால் அது கடும் விளைவுகளை உண்டாக்கலாம் என்பதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை.
மேலும் அவர் வேறுவழியின்றி கட்சி பொறுப்பிலிருந்து மட்டும் நீக்கப்பட்டுள்ளார்.