எம்ஜிஆருக்கு ஆதரவு கொடுத்தது போல ரஜினிக்கும் ஆதரவு... சைதை துரைசாமி அதிரடி..!!

Published : Dec 04, 2020, 10:56 AM ISTUpdated : Dec 04, 2020, 10:58 AM IST
எம்ஜிஆருக்கு ஆதரவு கொடுத்தது போல ரஜினிக்கும் ஆதரவு... சைதை துரைசாமி அதிரடி..!!

சுருக்கம்

அவருக்கு எம்ஜிஆருக்கு துணை  நின்று ஆதரவளித்து திமுகவை வீழ்த்திய அனைவரும் ஆதரவு தருவார்கள் என்பது திண்ணம். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்களின் நலனை மட்டுமே மனதில் கொண்டு அவர் முழுநேர அரசியலில் ஈடுபடுவது என்று முடிவு எடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது, 

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில் தொடரட்டும் ரஜினியின் அரசியல் பணி எனவும், எம்ஜிஆருக்கு துணை நின்று ஆதரவளித்து திமுகவை வீழ்த்திய அனைவரும் ரஜனிக்கு ஆதரவு தருவார்கள் எனவும்  அதிமுக அரசியல் பிரமுகரும், சென்னை மாநகரின் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:

சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஜனவரியில் கட்சி துவக்கம், வருகின்ற டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு என்று சொல்லியிருக்கிறார். இது சாதாரண அறிவிப்பு அல்ல. தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திருப்பம். இது 1972-ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொண்டுவந்த மாற்றத்தைப் போல அமையக்கூடிய திருப்பத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவித்துள்ளார். 

கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் 5ஆம் தேதி சென்னை வேலப்பன் சாவடியில், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலை திறப்பு விழாவில் அவர் என்னால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போல நல்லாட்சியை, ஏழைகளுக்கான ஆட்சியை, சாமானியர்கான ஆட்சியை நடுத்தரவர்க்க குடும்பங்களுக்கான ஆட்சியை தர முடியும் என்பதை ஆழ்ந்த நம்பிக்கையுடன் உறுதிபட சொல்லி இருந்தார். நல்ல திறமையான ஆலோசகர்களையும் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி அத்தகைய ஒரு ஆட்சியை கொடுப்பேன் என்பதையும் சொல்லியிருந்தார். ஏழைகளுக்கான சாமானிய மக்களுக்கான புரட்சித் தலைவரின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்ய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முன் வந்திருப்பதை நான் வரவேற்கிறேன். 

அவருக்கு எம்ஜிஆருக்கு துணை  நின்று ஆதரவளித்து திமுகவை வீழ்த்திய அனைவரும் ஆதரவு தருவார்கள் என்பது திண்ணம். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்களின் நலனை மட்டுமே மனதில் கொண்டு அவர் முழுநேர அரசியலில் ஈடுபடுவது என்று முடிவு எடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு, நிச்சயம் அது நடக்கும் என்ற ரஜினியின் நம்பிக்கையான வார்த்தையை வரவேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!