எடை குறைவாக அரிசி வழங்கல்..! பெண் புகார்... டூவீலரில் பறந்த அமைச்சர் செல்லூர் ராஜு..கடைக்காரர் சஸ்பெண்ட்.!!

By T BalamurukanFirst Published Jun 2, 2020, 8:26 AM IST
Highlights

ரேசன் கடையில் அரிசி எடைக்குறைவாக வழங்கியதாக மதுரை பெண் ஒருவர் அமைச்சர் செல்லூர் ராஜீவிடம் நேரடியாக 
புகார் தெரிவித்ததால் உடனடியாக டூவீலரில் பறந்து சென்று சம்மந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட காட்சி மதுரையில் பரபரப்பாக இருந்தது. அமைச்சர் இதேபோன்று அனைத்துக்கடைகளில் நடக்கும் முறைகேடுகளை பறந்துபறந்து ஆய்வு செய்து ஆக்சன் எடுப்பாரா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

ரேசன் கடையில் அரிசி எடைக்குறைவாக வழங்கியதாக மதுரை பெண் ஒருவர் அமைச்சர் செல்லூர் ராஜீவிடம் நேரடியாக 
புகார் தெரிவித்ததால் உடனடியாக டூவீலரில் பறந்து சென்று சம்மந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட காட்சி மதுரையில் பரபரப்பாக இருந்தது. அமைச்சர் இதேபோன்று அனைத்துக்கடைகளில் நடக்கும் முறைகேடுகளை பறந்துபறந்து ஆய்வு செய்து ஆக்சன் எடுப்பாரா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 எடை குறைவாக அரிசி விநியோகிக்கப்பட்டதாக பெண் அளித்த புகாரையடுத்து, உடனடியாக இரு டூவீலரில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்குச் சென்றார் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு. அங்கு ஆய்வு செய்து எடையாளரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். அதிமுக சார்பில், மதுரை பெத்தானியாபுரத்தில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணத் தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் கே. ராஜு, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். அப்போது அங்கு வந்த ஒரு பெண்,  இப்பகுதியில் இருக்கும் நியாய விலைக் கடையில் பாதிக்குப் பாதி அளவு மட்டுமே அரிசி விநியோகம் செய்யப்படுவதாக, அமைச்சரிடம் புகார் தெரிவித்தார். 

 கடை ஊழியர்களிடம் இது பற்றி கேட்டதற்கு பதில் கூறவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். இதையடுத்து, கடை விவரத்தை அந்த பெண்ணிடம் விசாரித்த அமைச்சர், உடனடியாக அங்கிருந்த கட்சி நிர்வாகி ஒருவரின் டூவீலரில் வாகனத்தின் பின்னால் அமர்ந்து சம்பந்தப்பட்ட கடைக்கு நேரடியாகச் சென்றார். கடைக்குள் பொருள்களை விநியோகித்துக் கொண்டிருந்த அந்த நபரை விசாரித்தபோது, அவருக்கும் கடைக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது.    அவர், அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பதும், கடையின் எடையாளர் தர்மேந்திரன் என்பவருக்கு உதவியாக அங்கீகாரம் இல்லாத பணியாளராக இருந்து வந்ததும் தெரியவந்தது.  பெரியசாமியை கைது செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.  

 

  நியாய விலைக் கடையில் பயன்படுத்தப்பட்ட விற்பனை முனைய கருவியில் ஆய்வு செய்தபோது, அப்பெண்ணுக்கு 20 கிலோ அரிசி விற்பனை செய்யப்பட்டிருப்பதாகப் பதிவாகியிருந்தது. ஆனால், அவருக்கு 9.5 கிலோ மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமைச்சர் உத்தரவின்பேரில், கடையின் எடையாளரை கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் பணி இடைநீக்கம் செய்துள்ளார். 
அமைச்சரின் அதிரடி நடவடிக்கை மதுரையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தொடர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.

click me!