
ரஜினி அரசியலுக்கு வருவாரா என பல ஆண்டுகள் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு , விரைவில் அவர் அரசியலுக்கு வரப்போகிறார். புதிய கட்சி தொடங்கப்போகிறார். என்பது போன்ற தகவல்கள் சந்தோஷத்தை அளித்திருக்கிறது.
ஆனால் ரஜினியின் அரசியல் வரவை அரசியல்வாதிகள் பலரும், அந்த அளவிற்கு விரும்பவில்லை. மேலும் ரஜினியின் அரசியல் வரவு, பலவாராக விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்த நிலையில் லொள்ளுசபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஜீவா, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து, ஒரு பேட்டியின் போது தெரிவித்திருக்கும் கருத்துக்கள், கொஞ்சம் டூ மச் எனும்படி ஆகியிருக்கிறது.
ரஜினிக்கு ஆதரவாக பேசியிருக்கும் ஜீவா ”ரஜினி தான் அடுத்த தமிழக முதல்வர், 150 தொகுதிகளில் அவருக்கு அமோக ஆதரவு இருக்கிறது. என பிரபல நாளிதழிலேயே தெரிவித்திருக்கிறார்கள்.”
அடுத்த தேர்தலில் ரஜினி தான் தமிழக முதல்வர். அதனை தொடர்ந்து வரும் தேர்தலில் ரஜினி தான் இந்திய பிரதமர். என்றும் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசுகையில் ஜீவாவின் இந்த டாக் கொஞ்சம் டூ மச் தான். என சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.