திமுக தலைவரை போனில் அழைத்த ரஜினி... இன்ப அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின் குடும்பம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 01, 2021, 11:06 AM IST
திமுக தலைவரை போனில் அழைத்த ரஜினி... இன்ப அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின் குடும்பம்...!

சுருக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என அரசியல் கட்சி தலைவர்கள் பிசியாக சுழன்று வருகின்றனர். இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் தெரிவித்து வருகின்றனர்.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினிகாந்த் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பரஸ்பரம் இருவரும் உடல் நிலை குறித்து விசாரித்துக்கொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் அவருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!