ரேஷன் அட்டை தாரர்களுக்கு சூப்பர் செய்தி.. தீபாவளிக்கு முன்னாடி 3 நாள்.. நியாய விலை கடைகளுக்கு அதிரடி உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Oct 14, 2021, 12:19 PM IST
Highlights

தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு நியாயவிலை கடைகளில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்து வைக்கவும், அட்டை தாரர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு நியாயவிலை கடைகளில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்து வைக்கவும், அட்டை தாரர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நவம்பர் 4-ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களும் எளிதில் கிடைக்கும் வகையில்  கடைகளை  தீபாவளி பண்டிகைக்கு 3 தினங்களுக்கு முன்பிருந்தே காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: காவல் நிலையத்தில் பாலியல் வக்கிரம்.. பெண் டைப்பிஸ்டின் உதட்டை கடித்த காக்கி வெறிச் செயல்.. இது போலீசா? இல்ல???

அதாவது உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், தீபாவளி- 2021 பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பயன்பெறும் வகையில் நவம்பர் 2021 மாதத்துக்கான சிறப்பு அத்தியாவசிய பொருட்கள் அதிகபட்சமாக  முன்நகர்வு செய்ய உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 1-11-2021, 12-11-2021, மற்றும் 3-11-2021 ஆகிய தினங்களில் நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்து இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: ஆளும் கட்சி மட்டும் அல்ல ஆண்ட கட்சியும் பணத்தை வாரி இறைத்தது.. அதிமுகவை டாராக கிழித்து தொங்கவிட்ட ராமதாஸ்.

எனவே உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரையின்படி சிறப்பு அத்தியாவசிய  பொருட்கள் நவம்பர் மாதத்திற்கான அதிகபட்சமான முன் நகர்வினை  முழுமையாக முடிக்கப்பட வேண்டும் எனவும், மேலும் அக்டோபர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் எனவும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
 

click me!