இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு... வெளியே சென்றால் காத்திருக்கு நடவடிக்கை.. உஷாரா இருங்க மக்களே..!

By Asianet TamilFirst Published Aug 30, 2020, 8:20 AM IST
Highlights

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆகஸ்ட் மாதத்தில்   இறுதி ஞாயிற்றுக்கிழமையாக இன்று தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 

கொரோனாவைக் கட்டுப்பத்தும் வகையில் கடந்த ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று நள்ளிரவு 12 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இன்று சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல வீட்டை விட்டு பொதுமக்கள் யாரும் வெளியேவும் வர முடியாது. மருத்துவத் தேவை, அவரசத் தேவை என்றால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது.


இந்த ஊரடங்கு நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும்.  அத்தியாவசிய தேவைகளான பாலகங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் மட்டுமே இன்று இயங்கும். இதர அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகைக் கடைகள், இறைச்சிக்கூடங்கள், உணவகங்கள், பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் இயங்காது. 
அதேவேளையில் ஆம்புலன்ஸ், மருத்துவ சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்காக சில இடங்களில் மட்டும் பெட்ரோல் பங்குகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று காவல் துறையும் சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ளன. பொதுமக்கள் வெளியே வராதவண்ணம் போலீஸ் பாதுகாப்பு சாலைகளில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று பொதுவெளியில் நடமாடினால் காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தமிழகமே வெறிச்சோடி காணப்படுகிறது.

click me!