பாஜக டெல்லிக்குதான் ராஜா... தமிழ்நாட்டில் இல்ல... ஹெச். ராஜாவுக்கு செல்லூர் ராஜூ பதிலடி..!

Published : Aug 29, 2020, 09:45 PM IST
பாஜக டெல்லிக்குதான் ராஜா... தமிழ்நாட்டில் இல்ல... ஹெச். ராஜாவுக்கு செல்லூர் ராஜூ பதிலடி..!

சுருக்கம்

பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சியில்தான் சவாரி செய்ய முடியும் என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “இலங்கை தமிழர்கள், நீட் விவகாரம் போன்றவற்றில் திமுக இரட்டை வேடம் போட்டு வருகிறது. தன்னுடைய பெயர் ஊடகங்களில் வெளியே வர வேண்டும் என்பதற்காகவே மு.க. ஸ்டாலின் தமிழக அரசை குறை கூறி வருகிறார். எதிர்க்கட்சி பாராட்ட வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. விஜய் ரசிகர்கள் சிறுபிள்ளைகள் போல் சுவரொட்டிகளை மதுரையி ஒட்டி வருகிறார்கள். நடிகர் விஜய் சினிமாவில் நன்கு வளர்ந்து வரக்கூடியவர். அவர் தமிழர். நல்ல நடிகர்.” எனத் தெரிவித்தார்.


தமிழகத்தில் பாஜக கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்த கருத்து குறித்து செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, “ஹெச்.ராஜா இப்படித்தான் ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார். பாஜக டெல்லிக்குதான் ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சியில்தான் அவர்களால் சவாரி செய்ய முடியும். தமிழகத்தில் பாஜக இன்னும் வளர வேண்டும்” என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!