அடக்கடவுளே இந்த வயசுலேயேவா... தமிழ் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் காலமானார்..!

Published : Aug 17, 2021, 08:43 AM IST
அடக்கடவுளே இந்த வயசுலேயேவா... தமிழ் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் காலமானார்..!

சுருக்கம்

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் விஜேவுமான ஆனந்த கண்ணன் காலமானார். அவருக்கு வயது 48.  

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் விஜேவுமான ஆனந்த கண்ணன் காலமானார். அவருக்கு வயது 48.

சன் மியூசிக் தொலைக்காட்சியின் ஆரம்பிக்கப்பட்ட போது மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன். வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளராக இருந்த இவர் 90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் விஜேவாக இருந்தவர். நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.

தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘சிந்துபாத்’, ‘விக்ரமாதித்யன்’ உள்ளிட்ட தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஏழு ஆண்டு காலமாக தொலைகாட்சிகளில் தலைகாட்டாமல் இருந்துவந்த ஆனந்த கண்ணன் சமீபத்தில் பிரபல தொலைகாட்சி ஒன்றில் தொகுப்பாளராக ஒப்பந்தமாகியிருந்தார். ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துமனையில் உயிரிழந்தார். ஆனந்த கண்ணன் மறைவிற்கு ரசிகர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்