சட்டப்பேரவையில் டி.ஆர்.பி. ராஜா உள்பட 4 பேருக்கு புதிய பொறுப்பு... அது என்ன பொறுப்பு தெரியுமா.?

By Asianet TamilFirst Published Aug 16, 2021, 9:12 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோர் இல்லாதபோது பேரவையை நடத்தும் மாற்றுத் தலைவர்கள் 4 பேர் செயல்படுவார்கள் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
 

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. இதன் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடந்த 13-ஆம் தேதி அன்று தாக்கல் செய்தார். இதேபோல தமிழக வரலாற்றில் முதன் முறையாக கடந்த 14-ஆம் தேதி அன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனையத்து பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவுவும் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டப்பேரவையின் மாற்றுத் தலைவர்களாக திமுகவை எம்.எல்.ஏக்களான அன்பழகன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன் மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் செயல்படுவார்கள் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சபாநாயகரும் துணை சபாநாயாகரும் இல்லாத நேரத்தில், பேரவையை மாற்றுத் தலைவர்கள் வழி நடத்துவார்கள். அந்த வகையில் தற்போது இவர்களுடைய பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!