அழகிரி மகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் !! வருமான வரித்துறை அதிரடி !!

Published : Mar 07, 2019, 10:58 AM IST
அழகிரி மகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் !! வருமான வரித்துறை அதிரடி !!

சுருக்கம்

திமுக முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி மகள் அஞ்சுகச் செல்விக்கு  முறையாக வருமான வரி கணக்கு செலுத்தாத வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.  

திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தற்போது மதுரையில் வசித்து வருகிறார். அவரது மகள் அஞ்சுகச் செல்வி, திருமணம் ஆகி அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்யாத குற்றத்துக்காக, அழகிரியின் மகள் மீது வருமான வரித் துறை சார்பில் 2018 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 -ம் தேதி, 12 வழக்குகள் தொடரப்பட்டன. 

இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அஞ்சுகச் செல்வி அழகிரி ஆஜராகவில்லை. 

இதையடுத்து அஞ்சுகச் செல்விக்கு  எதிராக ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி மலர் மதி உத்தரவிட்டார்.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
ராமதாசை மீறி அன்புமணியை அமைச்சராக்கினேன்.. என்னைய பாத்து இப்படி சொல்லிட்டாரே.. ஜிகே மணி வேதனை