20 ஆண்டுகளுக்குப் பின் வேலூர் தொகுதியில் களமிறங்கும் திமுக… மகனுக்காக உதவி கேட்ட துரைமுருகன் !! தெறித்து ஓடிய ஸ்டாலின் !!

By Selvanayagam PFirst Published Mar 7, 2019, 10:23 AM IST
Highlights

வேலுார் தொகுதியில், 20 ஆண்டுகளுக்கு பின், தி.மு.க., நேரடியாக களம் இறங்கும் நிலையில்  முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த்  அங்கு போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலுார் லோக்சபா தொகுதியில், 1998ல், அப்போதைய, தி.மு.க., மாவட்ட செயலர், பி.சண்முகம் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, வெற்றி பெற்றார். ஒரே ஆண்டில், மீண்டும் தேர்தலை சந்தித்த போது, தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., வேட்பாளர், என்.டி.சண்முகம் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, 2004ல் தி.மு.க., கூட்டணியின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர், காதர் மொய்தீன், எம்.பி.,யானார். 2009ல், அதே கட்சிக்கு, தி.மு.க., கூட்டணியில், மீண்டும், 'சீட்' கிடைத்தது.இதனால், அப்துல் ரகுமான் வெற்றி பெற்று, எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மீண்டும், 2014ல் முஸ்லிம் லீகுக்கு, தி.மு.க., இடம் ஒதுக்கியது. அ.தி.மு.க., வேட்பாளர், செங்குட்டுவன், எம்.பி., ஆனார்.பா.ஜ., கூட்டணி வேட்பாளர், ஏ.சி.சண்முகம், 40 ஆயிரம் ஓட்டுகள் பின்தங்கி, இரண்டாவது இடத்தை பிடித்தார். தி.மு.க., கூட்டணி வேட்பாளர், அப்துல் ரஹ்மான், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தொடர்ந்து, வேலுார் தொகுதியை, முஸ்லிம் லீகுக்கு மூன்று முறை ஒதுக்கியதாலும், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சீட் தராததாலும், கட்சித் தலைமை மீது அதிருப்தியடைந்த, தி.மு.க.,வினர், ஏ.சி.சண்முகத்துக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்ததாகவும், பரபரப்பு தகவல்கள் வெளியாயின.

தற்போது, 20 ஆண்டுகளுக்கு பின், வேலுார் மக்களவைத்  தொகுதியில், தி.மு.க., நேரடியாக களம் இறங்குகிறது. கடந்த தேர்தலில், துரைமுருகன் ஏற்படுத்திய கசப்பான அனுபவங்களால், வேலூர் தொகுதியில் இருந்து ஒதுங்கிய முஸ்லிம் லீக், ராமநாதபுரம் தொகுதிக்கு செல்கிறது.

இந்நிலையில், வேலுாரில் போட்டியிட சீட் கேட்டு, துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த், தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், விருப்ப மனு கொடுத்துள்ளார்.  மேலும் கடந்த வாரம், முஸ்லிம் லீக் மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்களிடம், தன் மகனுக்காக, துரைமுருகன் ஆதரவு திரட்டினார். இதையடுத்து துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியிள் களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் ஸ்டாலினை சந்தித்த துரைமுருகன்,  கடந்த தேர்தலில் ஏ.சி. சண்முகம் வேலூர்ல நூறு கோடிக்கும் மேல செலவு செய்துள்ளார். அதனால் இந்த முறை அவர் அதைவிட செலவி செய்வார். அதனால எனக்கு. கட்சி சார்பாக தேர்தல் செலவுக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுள்ளார்,


அதற்கு ஸ்டாலின், “நீங்கதான் கட்சிக்கு பொருளாளர். கட்சியோட பொருளாதார நிலைமை உங்களுக்குத் தெரியாதா? என கூறி மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து துரைமுருகன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

click me!