கூட்டணி வச்சிட்டா செஞ்சிடுவோமா? ராமதாஸ் டிமாண்ட்க்கு செக் வைத்த சுப்பிரமணிய சுவாமி!!

By sathish kFirst Published Mar 7, 2019, 10:46 AM IST
Highlights

7 பேர் விடுதலை குறித்து பிரதமர் மோடியிடம்  ராமதாஸ் வலியுறுத்தியுள்ள நிலையில் சுப்பிரமணியன் ஸ்வாமி நிராகரித்துள்ளது அரசியல் கூட்டணி கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

7 பேர் விடுதலை குறித்து பிரதமர் மோடியிடம்  ராமதாஸ் வலியுறுத்தியுள்ள நிலையில் சுப்பிரமணியன் ஸ்வாமி நிராகரித்துள்ளது அரசியல் கூட்டணி கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 28 வருடங்களுக்கு மேலாகச் சிறையில் இருக்கும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து, 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இன்னும் ஆளுநர் இதுகுறித்து இதுதொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.  

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிஜேபி - அதிமுக - பாமக ஆகியவை கூட்டணி அமைத்துள்ள நிலையில், கூட்டணிக்கு ராமதாஸ் விதித்த 10 நிபந்தனைகளில் 7 பேர் விடுதலையும் ஒன்றாகும். அதிமுக கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நேற்று  சென்னையை அடுத்த வண்டலூரில் நடந்து வரும் நிலையில், எழுவர் விடுதலை தொடர்பாகப் மோடியிடம் நேரடியாகவே பேசினாராம் ராமதாஸ்.

இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகள் சார்பில் உரையாற்றிய ஒரே தலைவரான ராமதாஸ், தனது கோரிக்கை மனுவை மோடியிடம் அளித்த பின் தனது பேச்சைத் தொடங்கினர்.

அவர் ஆற்றிய உரையில்; “இந்தக் கூட்டணி வெற்றி பெறவில்லை என்று சொன்னால் வேறு எந்தக் கூட்டணியும் வெற்றி பெற முடியாது. தமிழகத்தின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றுதான் இக்கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. ராஜுவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை கோரிக்கை மனுவாகப் பிரதமரிடம் அளித்துள்ளேன்  எனப் பேசினார். 

7 பேர் விடுதலை விவகாரத்தை, கூட்டணி பேச்சுவார்த்தையில் ராமதாஸ் கோரிக்கையாக வைத்திருந்த நிலையில், சுப்பிரமணியசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் பாஜக கூட்டணி வைத்திருந்தாலும், ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என கருத்து சொன்னது கூட்டணி தலைவர்கள் அதிரவைத்துள்ளது.

click me!