கனகராஜ் மறைந்து இரண்டே நாளில் சூலூர் தொகுதியில் சீட்டுக்காக சண்டையை போடும் நிர்வாகிகள்..!

By Vishnu PriyaFirst Published Mar 22, 2019, 5:40 PM IST
Highlights

அரசியல் சாணக்கியத்தனம், சூதுவாது என எதுவும் தெரியாது. உள்ளத்தில் பட்டதை உதட்டில் கொட்டிவிடுவார் அம்புட்டுதான். இதனால் அவரது கட்சி சந்தித்த சர்ச்சைகளும், சங்கடங்களும் நிறைய. ஆனாலும் அவையெல்லாம் அவரது வெள்ளந்தி குணத்துக்காக உடனேயே மன்னிக்கப்பட்டது. யாருமே எதிர்பாராத நிலையில், நேற்று காலையில் சட்டென்று மாரடைப்பினால் மரணமடைந்துவிட்டார் மனிதர். 

’ஏனுங்க நான் ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.ங்க! என்னைய அதிகாரிங்க மதிக்கலேன்னா நான் அணி மாறிடுவேன், அப்புறம் ஆட்சிக்குதான் சிக்கல்.’ இப்படி சொன்ன ரெண்டே மணி நேரம் கழித்து ‘அட ஏனுங்க ஒரு எம்.எல்.ஏ. ஏதோ ஒரு ஆதங்கத்துல பேசிட்டா இப்படியா நியூஸ் போடுவீங்கோ? நான் என்னைக்குமே எடப்பாடியார் ஆதரவாளனுங்க! அவரு கொங்குத் தங்கம்ல!’ இப்படி உரிமையாய், வெள்ளந்தித்தனம் கலந்து பேசுவார். அவர்தான் கோயமுத்தூர் மாவட்ட சூலூரின் மறைந்த எம்.எல்.ஏ. கனகராஜ். 

அரசியல் சாணக்கியத்தனம், சூதுவாது என எதுவும் தெரியாது. உள்ளத்தில் பட்டதை உதட்டில் கொட்டிவிடுவார் அம்புட்டுதான். இதனால் அவரது கட்சி சந்தித்த சர்ச்சைகளும், சங்கடங்களும் நிறைய. ஆனாலும் அவையெல்லாம் அவரது வெள்ளந்தி குணத்துக்காக உடனேயே மன்னிக்கப்பட்டது. யாருமே எதிர்பாராத நிலையில், நேற்று காலையில் சட்டென்று மாரடைப்பினால் மரணமடைந்துவிட்டார் மனிதர். 

இவரது இழப்பினால் சூலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதனால் ‘சூலூரில் இடைத்தேர்தல் நடந்தால் எனக்குதான் சீட்!’ என்று தலைமைக்கு இப்பவே தூது விட துவங்கிவிட்டனராம் கோயமுத்தூர் மாவட்ட மாஜி மற்றும் தற்போதும் ஆக்டீவாக இருக்கும் தலைகள் சிலர். ’என்னோட ஸ்ட்ரென்த் உங்களுக்கே தெரியும். ஆனாலும் நான் அமைதியா இருக்கக் காரணம், கட்சி நல்லாயிருக்கோணும், நீங்க நல்லா ஆளோணுமேனுதான். அதுக்கு ஏத்த மாதிரி நீங்களும் பெருந்தன்மையா எனக்கு இந்த சீட்டை கொடுங்க.’ என்று உரிமையாக அழுத்திக் கேட்கிறாராம் ஆளுங்கட்சி மாஜி ஒருவர். 

கடந்த 2011 தேர்தலில் இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. ஜெயித்ததால், இப்போதும் அதே கூட்டணி அமைந்திருப்பதால் தங்களுக்கு கொடுப்பதுதான் சரியாக இருக்குமென்று அக்கட்சியினர் சிலர் தங்கள் தலைமையிடம் இப்போதே பிட்டை போட்டு, அ.தி.மு.க. தலைமையிடம் பேச சொல்கிறார்களாம். ஆக்சுவலாக இது தி.மு.க.வுக்கு ஓரளவு நல்ல செல்வாக்கான தொகுதி. நடிகர் ரஜினிகாந்தின் புதிய சம்பந்தியான வணங்காமுடியின் அண்ணன் பொன்முடி, தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இங்குதான் கோலோச்சினார். அதனால் அக்கட்சி புள்ளிகளும் சீட்டுக்கு அடிபோட துவங்கிவிட்டனராம். 

’ஏன்யா நேத்துதானே அவரு இறந்தாரு பாவம்! ரெண்டாம் நாள் காரியம் கூட முடியலை, அதுக்குள்ளே சீட்டு கேக்குறீங்களே. மாற்றுக் கட்சின்னாலும் சக மனுஷன் தானே!’ என்று  மற்ற கட்சி தலைவர்கள் மிரள... அ.தி.மு.க.வின் தலைமை பீட நிர்வாகியான எடப்பாடியாரோ ‘18 தொகுதி இடைத்தேர்தல்ல பெரும்பான்மையா ஜெயிச்சு, ஆட்சியை காப்பாற்ற நான் போராடுற இந்த நேரத்துல இந்த மரணம் எனக்கு ஷாக் கொடுத்திருக்குது. ஆனால் நம்ம கட்சிப்புள்ளிங்களோ இப்பவும் உள் அரசியல் பண்றாங்களேய்யா!’ என்று வருந்துகிறாராம். கரை வேஷ்டி கட்டுனா மனசு கல்லாகிடுமா டியர் தலைவர்களே?!..

click me!