பேட்டிகொடுத்து பேட்டிகொடுத்தே சுர்ஜித்தை பெட்டிக்குள்ளே மூடிட்டீங்களே... ஆளுங்கட்சியை குறைசொல்லும் மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Oct 29, 2019, 1:20 PM IST
Highlights

மு.க.ஸ்டாலின் மீட்பு பணியை பொறுத்தவரை, அரசு மெத்தனமாக செயல்பட்டு உள்ளது. பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப் பணியில் காட்டவில்லையோ என்ற ஆதங்களம் உள்ளது. 

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுர்ஜித்தின் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், சுஜித்தின் பெற்றோருக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் நான்கு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், 4 நாட்களுக்கு பிறகு 88 அடி ஆழத்தில் இருந்து சுர்ஜித் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

பிரேத பரிசோதனை முடிந்து சுஜித் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், சுர்ஜித்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனையடுத்து, சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட சுர்ஜித்தின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சுஜித்தின் இறப்பு குறித்து அறிந்ததும் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு வந்தார். திருச்சியில் இருந்து கார் மூலம் நடுக்காட்டுப்பட்டிக்கு சென்றார். அங்கு சுர்ஜித்தின் பெற்றோர் ஆரோக்கியராஜ்- கமலாமேரி மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சுஜித்தின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின் மீட்பு பணியை பொறுத்தவரை, அரசு மெத்தனமாக செயல்பட்டு உள்ளது. பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப் பணியில் காட்டவில்லையோ என்ற ஆதங்களம் உள்ளது. 

மேலும், பேசிய அவர் 36 அடி ஆழத்தில் இருந்தபோதே, குழந்தையை மீட்டிருக்க முடியும், பேரிடர் மீட்பு படையை உடனடியாக அழைத்திருக்க வேண்டும் என்றார். இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர், சுர்ஜித்தின் குடும்பத்திற்கு திமுக சார்பாக ரூ.10 லட்சம் நிவாரண நிதியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

 

click me!