சாத்தான்குளம் டூ ரஜினி.. திடீரென முன்னிலைப்படுத்தப்படும் உதயநிதி.. திமுகவின் புதிய வியூகம்..!

By Selva KathirFirst Published Jul 3, 2020, 10:03 AM IST
Highlights

சட்டமன்ற தேர்தலில் திமுக மு.க ஸ்டாலின் மட்டும் இன்றி உதயநிதி ஸ்டாலினையும் முன்னிலைப்படுத்தியே களப்பணியாற்ற உள்ளதாகவும் இதற்கான வியூகமாகவே சமூக வலைதளங்களில் உதயநிதி அதிகம் புரமோட் செய்யப்படுவதாக கூறுகிறார்கள்.
 

சட்டமன்ற தேர்தலில் திமுக மு.க ஸ்டாலின் மட்டும் இன்றி உதயநிதி ஸ்டாலினையும் முன்னிலைப்படுத்தியே களப்பணியாற்ற உள்ளதாகவும் இதற்கான வியூகமாகவே சமூக வலைதளங்களில் உதயநிதி அதிகம் புரமோட் செய்யப்படுவதாக கூறுகிறார்கள்.

திமுக இளைஞர் அணிச் செயலாளர் பதவிக்கு வந்தது முதல் உதயநிதி ஆக்டிவ் அரசியலில் இருக்கிறார். ஆனால் பெரும்பாலும் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை. மாவட்டச் செயலாளர்களுடன் சந்திப்பு, சமூக வலைதளங்களில் கருத்து என்று ஒரு எல்லைக்குள்ளே அவர் அரசியல் செய்து வந்தார். முதல் முறையாக சாத்தான்குளம் சம்பவத்தில் திமுக தலைமையின் நேரடி பிரதிநிதியாக அங்கு சென்று வந்தார் உதயநிதி. இதனால் சர்ச்சை எழுந்த நிலையிலும் கூட உதயநிதி இந்த விவகாரத்தில் ஓரளவு ஸ்கோர் செய்துவிட்டார் என்றே கூறலாம்.

சம்பவம் நடைபெற்ற போது ராத்திரி பகலாக அங்கு இருந்த கனிமொழி கடந்த இரண்டு நாட்களாக சாத்தான் குளம் சம்பவ விவகாரத்தில் ஒதுங்கியது போல் தெரிகிறது. போலீஸ் கைது நடவடிக்கை எடுத்த பிறகு இந்த விஷயம் வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில் திடீரென ரஜினியை வஞ்சப் புகழ்ச்சி செய்து நேரடியாகவே உதயநிதி ட்வீட் செய்தார். இதற்கு முன்பு எல்லாம் ரஜினி பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சனம் செய்வதை உதயநிதிவாடிக்கையாக வைத்திருந்தார்.

ஆனால் ரஜினியை நேரடியாக விமர்சித்து திமுக வெர்சஸ் ரஜினி என்கிற களத்தை உதயநிதி நேரடியாகவே துவக்கி வைத்துவிட்டார். இதன் மூலம் ரஜினி ரசிகர்கள் உதயநிதிக்கு எதிராக களமாட ஆரம்பித்துவிட்டனர். இப்படி திடீரென மிக முக்கிய விஷயங்களில் உதயநிதி முன்னிலைப்படுத்தப்படுவதும் ஸ்டாலின் பின்னணியில் இருப்பதும் திமுகவின் புதிய வியூகம் என்கிறார்கள். கலைஞர் – ஸ்டாலின் இருந்த போது எந்த மாதிரியான அரசியல் திமுக செய்ததோ அதே பாணியில் தற்போது ஸ்டாலின் – உதயநிதி என்று செயல்பட முடிவெடுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.

தேர்தல் சமயத்திலும் கூட ஸ்டாலின் கலைஞரை போல் லிமிடெட் பிரச்சார கூட்டங்களில் மட்டும் பங்கேற்க உள்ளதாகவும் கலைஞர் இருந்த போது ஸ்டாலின் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது போல் உதயநிதியை களம் இறக்கவும் வியூகம் வகுத்துள்ளதாக சொல்கிறார்கள். இதற்கு உதயநிதிக்கு விளம்பரம் தேவைப்படுவதால் தான் ஸ்டாலின் ஒரு சில இடங்களில் மகன் உதயநிதிக்கு ஸ்கோப் கொடுத்து ஒதுங்குவதாக கூறுகிறார்கள். இது கலைஞர் ஸ்டைல் அரசியல் என்று கூறப்படுகிறது. ஆனால் கலைஞர் இருந்த போது ஸ்டாலின் ஆக்டிவாக இருந்ததை விட உதயநிதி ரொம்ப ஆக்டிவாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இதே போல் கட்சி நிர்வாகிகளும் ஒரே அணியில் உதயநிதிக்கு பின்னால் நிற்கிறார்கள். ஆனால் கலைஞர் இருந்த போது கட்சி நிர்வாகிகள் ஸ்டாலின் பின்னால் இப்படி நிற்கவில்லை. இப்படி இந்த சாதகமான விஷயங்களை எல்லாம் வைத்து தேர்தலில் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகிய இருவரை மட்டுமே மையமாக வைத்து திமுக களம் இறங்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக வரும் நாட்களில் உதயநிதியின் அரசியல் செயல்பாடுகள் தீவிரமாகும் என்று சொல்லப்படுகிறது. கொரோனா பரவி வரும் சூழலில் ஸ்டாலின் வெளியே செல்வது ரிஸ்க் என்பதால் அந்த பணிகளை உதயநிதி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

click me!