அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்... அடுத்து நடக்கப்போகும் அதிரடி..!

By Thiraviaraj RMFirst Published Aug 14, 2019, 3:59 PM IST
Highlights

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு  விசாரணையின் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு  விசாரணையின் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

 

அமைச்சர் பதவியை பயன்படுத்தி 2011 முதல் 2013 ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ராஜேந்திர பாலாஜி மீது, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் எந்தவித முகாந்திரமும் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டது. மீண்டும் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், ஆஜரான லஞ்ச ஒழிப்பு துறையினர், விசாரணையின் அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்தனர். 

இந்த, வழக்கு விசாரணையின் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

click me!