எவ்வளவு தூசு தட்டினாலும்... ராஜேந்திர பலாஜியை ரவுண்டு கட்ட முடியல...!

By Asianet TamilFirst Published Aug 14, 2019, 3:53 PM IST
Highlights

அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில்  மனு ஒன்று தாக்கல் செய்யப்படது, அதில், அமைச்சர் ராஜேந்திர  பாலாஜி  மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டதாகவும், அந்த விசாரணையின் ஊழல் நடத்தப்பட்டதற்கான முகாந்திரம் இல்லாததால் விசாரணை நிறுத்திவைக்கப்பட்டு, பின்னர் அந்த வழக்கு முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளதாகவும் அதில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான  சொத்துக்குவிப்பு வழக்கில் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை  உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்து வருகிறார் ராஜேந்திர பாலாஜி, இவர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்ததிலுருந்தே அமைச்சராக பதவி வகித்துவருகிறார், இந்நிலையில் கடந்த 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கிடைபட்ட காலத்தில்  தனக்குள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் எனவும், அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் மதுரை தல்லாகுளத்தைச்சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

அந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில்  மனு ஒன்று தாக்கல் செய்யப்படது, அதில், அமைச்சர் ராஜேந்திர  பாலாஜி  மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டதாகவும், அந்த விசாரணையின் ஊழல் நடத்தப்பட்டதற்கான முகாந்திரம் இல்லாததால் விசாரணை நிறுத்திவைக்கப்பட்டு, பின்னர் அந்த வழக்கு முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளதாகவும் அதில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் அந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்ய பொதுப்பணித் துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டதுடன்,  வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

 

click me!