அந்த நாள் வந்தே விட்டது... கருணாநிதி குடும்பத்தில் நடக்க இருக்கும் திடீர் திருப்பம்... ஆனந்த கண்ணீரில் செல்வி!

By Thiraviaraj RMFirst Published May 27, 2021, 11:16 AM IST
Highlights

சகோதர யுத்தம் முடிவுக்கு வந்ததால் சென்னை வரவிருக்கும் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி விரைவில் அவரது சகோதரரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

சகோதர யுத்தம் முடிவுக்கு வந்ததால் சென்னை வரவிருக்கும் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி விரைவில் அவரது சகோதரரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

தென் மண்டல பொறுப்பாளராக இருந்த கருணாநிதி மகன் மு.க.அழகிரியை கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலேயே கட்சியில் இருந்து விலக்கி வைத்திருந்தனர். கருணாநிதி மறைவிற்கு பிறகும் கட்சியில் இணைய மு.க.அழகிரி பகிரத பிரயேத்னப்பட்டு வந்தார். ஆனால், எதிர்மறை, நேர்மறை முயற்சிகளும் பலனளிக்கவில்லை. நீண்ட காலமாக கருணாநிதியின் மகன்களான முதல்வர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி நேரில் சந்தித்து பேசாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் மதுரைக்கு வந்த மு.க.ஸ்டாலின், அழகிரி வீட்டிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு நடக்கவில்லை.

இந்நிலையில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு 10 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது . நாளை பெயர் சூட்டு விழா நடக்கவுள்ளது. கொரோனா காரணமாக இந்த விழாவுக்கு குறிபிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்காக சென்னை செல்லும் மு.க.அழகிரி ஈஞ்சம்பாக்கம் பங்களாவில் தங்குகிறார்.

இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா? என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஸ்டாலின் ,அழகிரி சந்திப்பு இன்று சென்னையில் நடக்கலாம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவறும் பட்சத்தில் அவர்களது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி பிறந்தநாள் வரும் ஜூன் 3 ம் தேதி வரவுள்ளது. இதனையொட்டி அழகிரி கருணாநிதியின் வீட்டிற்கு செல்வார். இங்கு இருவரது சந்திப்பு நடக்கலாம் அல்லது அதற்கு முன்னதாகவே அழகிரி கோட்டைக்கோ, அல்லது வீட்டிற்கோ சென்று ஸ்டாலினை சந்திப்பார் என கூறப்படுகிறது. இருவரது சமரச ஏற்பாட்டு விஷயத்தில் கருணாநிதியின் மகள் செல்வி மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆக, மதுரையில் நடக்காத சந்திப்பு சென்னையில் நடந்தே தீரும் எனக் கூறப்படுகிறது. காரணம், வெற்றிபெற்ற உடன் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லிய மு.க.அழகிரி, ‘சென்னை வரும்போது நான் உன்னை நிச்சயம் சந்திப்பேன்’ எனக் கூறியிருந்தார். 

click me!