தமிழகம், புதுச்சேரிக்கு அவகாசம் கொடுங்கள்.. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published May 27, 2021, 11:08 AM IST
Highlights

கடந்த ஆண்டு நிதியமைச்சகம் இச் சேமிப்புகளின் தவணையைச் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு தந்தது. தண்டத் தொகையை ரத்து செய்தது, புதுப்பித்தல் கட்டணங்களையும் தள்ளுபடி செய்தது. 

அ‌ஞ்ச‌ல் அலுவலக சிறு சேமிப்புகள்-தண்டத் தொகை ரத்து - கால தவணை கெடு நீட்டிப்பு கோரி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதன் விவரம்: அன்றாட வாழ்க்கைக்கே அல்லாடும் சாமானிய மக்களின் சேமிப்புகள் இவை. 

இ‌ந்த அ‌ஞ்ச‌ல் அலுவலக சிறு சேமிப்புகள் - Recurring Deposits (RD), Public Provident Fund (PPF), Suhanya Samriddhi Yojana (SSA)- தவணைகளுக்கு காலக் கெடு உண்டு. அதற்குள் கட்டத் தவறினால் தண்டத் தொகை உண்டு. தவறினால் காலாவதியாகி விடும். அதைப் புதுப்பிப்பதற்கு கட்டணம் உண்டு. இதில் சுகன்யா திட்டம் பெண் குழந்தைகளுக்கானது. 

கடந்த ஆண்டு நிதியமைச்சகம் இச் சேமிப்புகளின் தவணையைச் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு தந்தது. தண்டத் தொகையை ரத்து செய்தது, புதுப்பித்தல் கட்டணங்களையும் தள்ளுபடி செய்தது. (பார்வைக்கு - எப். எண் 113-03/2017- SB / தேதி 31.03.2020- இந்திய அரசு, தகவல் தொடர்பு அமைச்சகம், அ‌ஞ்ச‌ல் துறை). 

இந்த ஆண்டும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தேசத்தின் பல பகுதிகள் கோவிட் பெரும் தொற்றின் இரண்டாம் அலை பரவலால் ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. ஆகவே கடந்த ஆண்டு எடுத்த அதே முடிவை எடுத்து சிறு சேமிப்புகளுக்கான தவணைக் கெடு நீட்டிப்பு, தண்டத் தொகை ரத்து, புதுப்பித்தல் கட்டணம் தள்ளுபடி ஆகியவற்றை உடன் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒன்றிய அரசு ஏழை நடுத்தர மக்களின் பாடுகளை உணர்ந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

click me!