டெல்லி நீதிபதி திடீர் இடமாற்றம்.!! சர்ச்சையை கிளப்பும் காங்கிரஸ் .!!

By Thiraviaraj RMFirst Published Feb 28, 2020, 7:59 AM IST
Highlights

டெல்லி கலவர வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டது, பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

T.Balamurukan

டெல்லி கலவர வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டது, பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டெல்லி காவல்துறை மீது நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது வெறுப்புணர்வை தூண்டும்வகையில் பேசியதாக கூறப்படும் மத்திய மந்திரி அனுராக் தாக்குர், பா.ஜனதா தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யாதது ஏன்? என்று நீதிபதிகள் கேட்டனர். இதனால் மத்திய அரசில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நீதிபதி முரளிதர் பணியிட மாற்ற உத்தரவு வெளியானது. அவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்திருப்பதாக மத்திய சட்ட அமைச்சகத்தின் அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருந்தது.நீதிபதி இடமாற்றம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர்' பக்கத்தில், 'இந்த நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்படாத துணிச்சலான நீதிபதி லோயாவை நினைவு கூர்கிறேன்' என்று கூறியுள்ளார்.

பா.ஜனதா தலைவராக இருந்த அமித்ஷா மீதான சொராபுதின் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி நாக்பூரில் மாரடைப்பால் காலமானார். அதை நினைவுகூர்ந்து, ராகுல் காந்தி இக்கருத்தை தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'ட்விட்டர்' பக்கத்தில்.,'இந்த அரசை பார்க்கும்போது, நள்ளிரவில் நடந்த நீதிபதி பணியிட மாற்றம் அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால், இது உண்மையிலேயே வெட்கக்கேடானது'.என பதிவு செய்திருக்கிறார்.
 

click me!