
மொழி தெரியாக பெங்களூரு சிறையில் இருந்து சசிகலாவை தமிழக விறைக்கு மாற்ற வேண்டும் என பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கர்நாடகா சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணா உள்ளிட்ட அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு கூடுதலாக சலுகை அளித்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடகா சிறைத்துறை டிஐஜி ரூபா, கிளப்பியுள்ள இந்த புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி, சசிகலா செய்த குற்றத்துக்காக அவருக்கு போதுமான தண்டனை கிடைத்து விட்டது என கூறினார்.
அவருக்கு பெங்களூரு சிறையில் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக வந்த தகவல் தவறானது என்றும், ஏற்கனவே தண்டனை பெற்ற அவர் லஞ்சம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டார் என்று தான் நினைப்பதாக தெரிவித்தார்.
மொழி தெரியாத கர்நாடக சிறையில் இருப்பதைவிட சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தினார்.