”சிஷ்டம் சரியில்லை என்றால் களத்தில் இறங்கி போராடலாம்” – கமலுக்கு பெர்மிஷன் கொடுத்த கருணாஸ்…

Asianet News Tamil  
Published : Jul 14, 2017, 09:40 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
”சிஷ்டம் சரியில்லை என்றால் களத்தில் இறங்கி போராடலாம்” – கமலுக்கு பெர்மிஷன் கொடுத்த கருணாஸ்…

சுருக்கம்

If Kamal Hassan said that he is not feeling good in Tamil Nadu he could be free to fight in the field

தமிழகத்தில் சிஷ்டம் சரியில்லை என்று கமலஹாசன் சொன்னால் தாராளமாக களத்தில் இறங்கி போராடலாம் என்றும் சிஷ்டத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கு உள்ளது என்றும் எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். 
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தை அழிப்பதாகவும், நிகழ்ச்சியை தடை செய்து கமல் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் இந்து அமைப்பு புகார் அளித்துள்ளது.
நிகழ்ச்சி குறித்து, நடிகர் கமல் ஹாசன் விளக்கமளிக்கும் வகையில், பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக கூறியிருந்தார்.
மேலும் தமிழகத்தில் சிஷ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் இன்று சொல்லுகிறார் நான் அன்றே சொன்னேன் என தெரிவித்தார். 
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ்,  தமிழகத்தில் சிஷ்டம் சரியில்லை என்று கமலஹாசன் சொன்னால் தாராளமாக களத்தில் இறங்கி போராடலாம் என்றும் சிஷ்டத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கு உள்ளது என்றும் தெரிவித்தார். 
கமலஹாசன் ஒரு சிறந்த நடிகர், அதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. ஆனால் வெறும் விமர்சனத்தை மட்டும் வைத்து வரக்கூடாது என தெரிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!