
அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ப.சிதம்பரம் முறைகேடு செய்துள்ளதாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதற்கான ஆதரங்களையும் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணிய சுவாமி, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதான புகார் குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, அவர், கூறியதாவது:
2ஜி அலைக்கற்றை முறைகேட்டால் நாடு மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ப.சிதம்பரம் முறைகேடு செய்துள்ளார். இதில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் பயனைந்துள்ளார்.
சட்டத்துக்கு புறம்பாக மலேசிய நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பரிவர்த்தனைகளை ப.சிதம்பரம் மறைத்துள்ளார்.
2014 தேர்தல் பிரமான பத்திரத்தில் வெளிநாட்டு பரிவர்த்தனை பற்றி குறிப்பிடவில்லை. பிரமான பத்திரத்தில் தவறான தகவல் குறிப்பிடபட்டிருக்கிறது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 3 முறை சம்மன் அளித்தும் கார்த்தி சிதம்பரம் புறக்கணித்துள்ளார்.
சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின்கீழ் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய முடியும். ஆனால் நிதி அமைச்சக உயரதிகார்டிகள் பலர் நடவடிக்கையை தடுத்து வருகிறார்கள்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.