வாடிப்பட்டியில் பெரும் வரவேற்பு… ஓபிஎஸ்சை ஆதரித்த சோழவந்தான் எம்எல்ஏ உற்சாகம்

 
Published : Feb 20, 2017, 03:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
வாடிப்பட்டியில் பெரும் வரவேற்பு… ஓபிஎஸ்சை ஆதரித்த சோழவந்தான் எம்எல்ஏ உற்சாகம்

சுருக்கம்

ஓபிஎஸ் சசிகலா இடையே நடைபெற்ற அதிகார யுத்தத்தில் தமிழகம் கடந்த சில நாட்களாக பரபரப்பாக இயங்கியது. சசிகலா முதலமைச்சராவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டார்.

அதேநேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்த அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து எடப்பாடி தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டது.

அந்த அரசு மீது கடந்த சனிக்கிழமை நம்பிகை வாக்கெடுப்பு நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர், ஓபிஎஸ்க்கு 11 பேர் ஆதரவளித்தனர்.

சசிகலா தரப்பிற்கு ஆதரவு அளித்த எம்எல்ஏக்கள் தற்போது தங்களது சொந்த தொகுதிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். காவல் துறையினரின் உதவியுடன் ஒரு சில அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தொகுதிய்ல உள்ள தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

ஆனால் ஓபிஎஸ்க்கு ஆதரவு அளித்த எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த தொகுதிக்குள் செல்லும்போது பொது மக்கள் அவர்களை மேளதாளம் முழுங்க உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் நேற்று அவரது சொந்த தொகுதியான ஆவடிக்கு செல்லும்போது அவரை ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றதுடன், அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தினர்.

இந்நிலையில்,ஓபிஎஸ்க்கு ஆதரவு அளித்த சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் இன்று அவரது சொந்த ஊரான வாடிப்பட்டிக்கு வருகை தந்தார்.

அப்போது அவருக்கு அதிமுக தொண்டர்களும், பொது மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பொது மக்கள் மாணிக்கத்தை வரவேற்ற பொது மக்கள் அவரை கட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக அழைத்தச் சென்றனர்.

தொகுதி மக்களின் மனநிலைக்கு ஏற்ப நடந்து கொண்ட எம்எல்ஏ மாணிக்கத்துக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனர்

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்