"ராம் மோகனராவ் மகனிடம் உள்ள காண்ட்ராக்டை ரத்து செய்யுங்கள்" - முத்தரசன் கருத்து

First Published Feb 20, 2017, 3:05 PM IST
Highlights


இளைஞர்களுக்கு உதவி தொகையை உயர்த்தி தருவதை விட காலியாக இருக்கும் 50 லட்சம் பணியிடங்களை நிரப்புங்கள் , பணியடங்களில் காண்டராக்ட் முறையில் ஆட்களை நியமிக்கும் காண்ட்ராக்டை  ராம் மோகன் ராவின் மகனிடமிருந்து ரத்து செய்யுங்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: 

முதலமைச்சர் பொறுப்பேற்று தலைமைசெயலகம் சென்று 5 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.  அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ,  500 கடைகளை நீக்க கையெழுத்திட்டதை வரவேற்கிறோம்.

டாஸ்மாக்  ஊழியர்கள் எதிர்கால வாழ்கையை கவனத்தில் கொண்டு இந்த ஏற்பாட்டை செய்ய வேண்டும். 

வேலையில்லா இளைஞர்களுக்கான இரட்டிப்பாக்கும் என்ற அறிவிப்பு , நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் விதத்தில் 50 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதை நியமிக்க வேண்டும். 

ராமமோகன ராவ் தலைமை செயலாளராக இருந்த போது காலிபணியிடங்களுக்கு காண்ட்ராக்ட் முறையில் ஆளை எடுக்கும் வேலையை செய்தனர். அந்த காண்ட்ராக்டும் ராமமோகன்ராவின் மகனிடம் இருக்கிறது. அதை நீக்கி முறையாக காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார். 

click me!