
நம்பிக்கை வாக்கெடுப்பை அங்கீகரிக்க கூடாது என ஓ.பி.எஸ்சும் ஸ்டாலினும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டிருந்தார். இந்நிலையில் இதுகுறித்த அறிக்கையை ஜமாலுதீன் இன்று ஆளுனரை நேரில் சந்தித்து வழங்கினார்.
சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 வாக்குகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றிபெற்றது. திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று அறிக்கை கேட்டிருந்தார். இதையடுத்து இன்று அதற்கான அறிக்கையை சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் இன்று நேரில் ஆளுனரை சந்தித்து வழங்கினார். அதில் சட்டப்பேரவையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விளக்கங்கள் அளிக்கபட்டுள்ளன. மேலும் சட்டபேரவை வீடியோ கட்சிகளும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.