மணல் விற்பனையை அரசே ஏற்குமா? - முதல்வர் பழனிச்சாமி ஓட்டம்

 
Published : Feb 20, 2017, 01:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
மணல் விற்பனையை அரசே ஏற்குமா? - முதல்வர் பழனிச்சாமி ஓட்டம்

சுருக்கம்

முதலமைச்சர் பழனிச்சாமி பதவி ஏற்ற பின்னர் ஐந்து கோப்புகளில் 5 உத்தரவுகளை பிறப்பிக்கும் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பொத்தாம் பொதுவாக பதிலளித்தார். மணல் விற்பனையை அரசே ஏற்குமா ? என்ற கேள்வியை எதிர்கொள்ளாமல் பாதியில் செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து சென்றார். 

செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது. 

மக்களுக்கு சேவை ஆற்றும் விதத்தில் இன்று 5 உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன். முதலவாதாக  மறைந்த முதலமைச்சர் அம்மா கொண்டு வந்த திட்டமாம்  அம்மா உழைக்கும் மகளிர் வாகன திட்டத்துக்கான மானியத்தை  50%  அல்லது அதிகபட்சம் ரூ.20 ஆயிம்  மானியம் என உயர்த்தி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன். இதற்காக   ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

இரண்டாவதாக  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை  திட்டத்தின் கீழ் ஏழை தாய்மார்கள் மகப்பேறு உதவிப்பெறும் திட்டத்துக்கான உதவித்தொகையை ரூ.12,000 லிருந்து 18 ,000 ஆக உயர்த்தியுள்ளேன். இதனால  6 லட்சம் தாய்மார்கள்  பயனடைவார்கள் , இதற்கு  360 கோடி ரூபாய் கூடுதல் செலவிடப்படும் .

 மீனவர்களுக்கு   5000 வீடுகள்   ரூ. 85 கோடி செலவில் தனி வீட்டு வசதி  திட்டத்தின் கீழ் கட்டித்தரப்படும்.  வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை   இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால்   55728 இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.

 மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மது விலக்கு கொண்டுவரப்படும் என்ற அடிப்படையில்  மறைந்த முதல்வர் அம்மா  கடந்த 24/5/2016 அன்று   500 கடைகள்  மூடும் உத்தரவில் கையெழுத்திட்டார் , இன்று மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன்.

தமிழகம் முழுதும் வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் வறட்சி நிவார பற்றி அறிவிப்பில்லையே?

வறட்சி நிவாரணம் மிக குறுகிய காலத்தில் விவசாய மக்களுக்கு வழங்கப்படும் . கண்க்கெடுக்கப்பட்டு வருகிறது விரைவில் அறிவிப்போம்.

 2 மாதங்களில் பல விவசாயிகள் மரணமடைந்து உள்ளனர். ஆனால் பெரும்பாலானோருக்கு தரவில்லையே? 

அது பற்றி அரசு பரிசீலிக்கும் 

சென்னை  முதல் தமிழகம்  முழுதும் தண்ணீர் பிரச்சனைக்கு என்ன நடவடிக்கை?

நான் முதல் பேட்டியிலேயே சொல்லி இருக்கிறேன். 140 ஆண்டு கால வறட்சி . நகர , கிராமபுற மக்களுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

மணல்விற்பனையை அரசே நேரடியாக விற்பனை செய்யப்படுமா?

அரசின் எல்லா அறிவிப்புகளையும் அறிக்கையாக உங்களுக்கு தருகிறேன். அனைவரும் வந்ததற்கு நன்றி இவ்வாறு அவர் கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே விட்டுவிட்டு எழுந்து சென்றார். 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு