“10 நாள்தான் டைம், வீட்டை காலி செய்யுங்கள்” - ஓ.பி.எஸ்க்கு அதிகாரிகள் நெருக்கடி...

 
Published : Feb 20, 2017, 04:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
“10 நாள்தான் டைம், வீட்டை காலி செய்யுங்கள்” - ஓ.பி.எஸ்க்கு அதிகாரிகள் நெருக்கடி...

சுருக்கம்

முதலமைச்சர் பதவியை விட்டு விலகியதையடுத்து 10 நாட்களுக்குள் வீட்டை காலி செய்யுங்கள் என்று ஓ.பன்னீர்செல்வத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கெடு விடுத்துள்ளனர்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. முதல்வராக பன்னீர்செல்வமும் பொதுச்செயலாளராக சசிகலாவும் பொறுப்பேற்றனர்.

பின்னர், முதல்வராக சசிகலா பொறுப்பேற்பதற்காக எம்.எல்.ஏக்கள்  கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கப்பட்டது. ஓ.பி.எஸ் ஓரங்கட்டபட்டார். இதற்கு பின்னர், இரண்டு நாட்கள் கழித்து சசிகலா தரப்புக்கு எதிராக ஓ.பி.எஸ் பேட்டி அளித்தார்.

தனி இயக்கம் தொடங்கினார். அவருக்கு ஆதாரவாக 10 எம்.எல்.ஏக்கள், 11 எம்.பி.க்கள், அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என பெரிய அணியே திரண்டது.

ஓ.பி.எஸ்க்கு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்கள மத்தியிலும் ஆதரவு எழும்புகிறது. ஓ.பி.எஸ்க்கு எழுந்த ஆதரவை கண்டு சசிகலா தரப்பினர் கடும் கோபம் கொண்டனர்.

சசிகலா தரப்பிற்கு கடும் போட்டியை எழுப்பிய ஓ.பி.எஸ் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுடன் இணைந்தார். ஓ.பி.எஸ் தரப்பினரை சசிகலா கட்சியில் இருந்து நீக்கினார்.

பதிலுக்கு சசிகலா தரப்பினரை ஓ.பி.எஸ் தரப்பு அவைத்தலைவர் மதுசூதனன் கட்சியில் இருந்து நீக்கினார்.

மறுபுறம் முதல்வராக யார் வரவேண்டும் என்பதில் கடும் போட்டி நிலவியது. இதில் சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். இதையடுத்து காபந்து முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் சாதாரண எம்.எல். ஏ தகுதியை அடைந்தார்.

பின்னர், கிரீன்வேல்ஸ் சாலையில் அமைச்சர்கள் வசிக்க அரசு ஒதுக்கீடு செய்த இல்லத்திலிருந்து பத்து நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என ஓ.பி.எஸ்க்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஓ.பி.எஸ் கடந்த 2011  ல் இருந்து இந்த இல்லத்தில் வசித்து வருகிறார். 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி என்பதால் அங்கு வசிக்க வில்லை . அதன்பின்னர், 2011 முதல் 2016 வரை நிதியமைச்சர் முதலமைச்சர் என பொறுப்புகள் வகித்த ஓ.பி.எஸ் கிரீன்வேல்ஸ் சாலையில் அமைச்சர் இல்லத்தில் வசித்து வருகிறார்.

2016 லும் அதிமுக ஆட்சியில் வெற்றி பெற்றதால் அதே இலத்தில் தொடர்ந்து வசித்து வருகிறார். சசிகலாவுக்கு எதிராக நிலைபாட்டை எடுத்த பிறகு தினந்தோறும் செய்தியாளர்களை அதே இல்லைத்தில் சந்தித்து வருகிறார்.

தற்போது முதல்வராக இல்லாமல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் அவர் அமைச்சர் இல்லத்தை காலி செய்ய வேண்டும். அவருக்கு மூன்று  மாதம் அவகாசம் உள்ளது. ஆனால் அந்த அவகாசத்தை தராமல் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை பத்து நாளில் வெளியேறும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கெடு விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பல முன்னாள் அமைச்சர்கள் மூன்று மாத கெடுவை தாண்டியும் அமைச்சர் குடியிருப்பை காலி செய்யாமல் இருந்த முன்னுதாரணங்கள் பல உண்டு.

ஆனாலும் ஓ.பி.எஸ் விவகாரத்தில், அவர் வகித்து வந்த துறை அதிகாரிகளே சட்டத்தை நிலைநாட்ட காட்டும் வேகம் பிரமிக்க வைக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்